RTE மாணவர் சேர்க்கையில் பெற்றோர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை...!
RTE மாணவர் சேர்க்கையில் பெற்றோர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை மனுவினை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் தனியார் பள்ளிகள இயக்குனருக்கு அனுப்பியுள்ளது.
இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு K. R. நந்தகுமார் அவர்கள் தமிழக அரசுக்கு கீழ்க்கண்ட கோரிக்கையை முன் வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது...
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுக்கேற்ப அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம் RTE 25 % மாணவர் சேர்க்கை செய்ய 02.10.2025 உத்தரவு போட்டுள்ளீர்கள்.
இதுவரை நடந்த RTE மாணவர் சேர்க்கை என்பது கடந்த ஆண்டு எல்.கே.ஜி. வகுப்பில் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதில் 25 % கணக்கில் எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை மாணவர்களுக்கு ஆர். டி. இ. 25 % சேர்க்கை செய்ய அறிவுறுத்துவது தான் கடந்த கால நிகழ்வாகும்.
ஆனால் தற்பொழுது தாங்கள் இந்த ஆண்டு எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்திட்ட மாணவர்களில் 25 % தேர்வு செய்து பட்டியலை சமர்ப்பிக்க கால அட்டவணை வழங்கி உள்ளீர்கள்...
நாங்கள் தனியார் பள்ளிகளில் ஜூன் மாதமே மாணவர்கள் சேர்க்கையை முடித்து விட்டோம். அவர்களிடம் உரிய கல்வி கட்டணத்தை பெற்று அவர்களுக்குரிய புத்தகம், நோட்டு புத்தகம், யூனிபார்ம் இன்ன பிறவற்றை வழங்கி பாடங்களை நடத்தி காலாண்டு தேர்வுகளையும் முடித்து விட்டோம்.
இந்த நிலையில் அதே மாணவர்களை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25% சேர்க்கச் சொன்னால் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மீண்டும் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்படும்.
எனவே தயவு செய்து தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் அரசாணைகளில் உள்ள குளறுபடிகளை தயவு செய்து நீக்கி.....
புதிதாக தேதி நிர்ணயம் செய்து புதிதாக ஆர்.டி.இ மாணவர்களை சேர்க்க அரசாணை வெளியிட்டு மாணவர்கள் சேர்க்கை செய்ய வேண்டுகிறோம்..
இல்லையென்றால் தனியார் பள்ளிகளுக்கு மிகப்பெரும் சட்ட சிக்கல், பொருளாதார சிக்கல் ஏற்படும் என்பதை தங்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இதனால் தனியார் பள்ளிகளுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும்.
அதுவும் தனியார் பள்ளிகள் எல்கேஜி மாணவ, மாணவியரிடம் வாங்கிய கட்டணத்தை 7 நாட்களுக்குள்ளாக அவர்களுக்கு திரும்ப தர வேண்டும் என்ற ஒரு தடவை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை..
தனியார் பள்ளிகளுக்கு தரவேண்டிய கல்வி கட்டண நிலுவைத் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலக கொடுக்காமல் இருந்துவிட்டு.....
இப்பொழுது நாங்கள் சேர்த்திட்ட மாணவர்களையே ஆர். டி. இ. மாணவர்களாக சேர்த்துக்கொண்டு வாங்கிய கட்டணத்தை திரும்ப கொடு என்று சொல்வது அரசுக்கு தனியார் பள்ளிகள் மீது எவ்வளவு காழ்புணர்ச்சி என்பதை எங்களால் உணர முடிகிறது.
தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற்று கடந்த ஆண்டுகளைப் போல் ஓபன் முறையில் பொது அறிவிப்பு வெளியிட்டு புதிதாக ஆர். டி.இ . சேர்க்கை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் RTE யில் சேர தயார் நிலையில் காத்திருக்கும் சுமார் ஒரு லட்சம் புதிய மாணவ, மாணவியர்கள் எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வியை தொடர்ந்து பெறுவதற்கு ஏதுவாகும்.
இந்த கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசிலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கிறோம் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகளும் பெற்றோர்களும் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள்...
தற்போது தமது பள்ளியில் பயிலும், மாணவர்களேயே 25 %த்தில் select செய்தால் கிடைக்காத மாணவர்கள் நம்மிடம் கோபப்பட்டு, நாம் ஏதோ கிடைப்பதற்கு சலுகை செய்ததாக என்னி, பள்ளியை விட்டு வெளியேறுவார்கள்.
இது தவிர 25 % வந்தால்தான் சேருவோம் என காத்திருப்பவர்களுக்கு இழப்பு ஏற்படும்.
பல கிராமப்புறங்களில், மழலையர் பள்ளிகளில் 25 % RTE சேர்க்கையை சொல்லுங்கள் /நியபகப்படுத்துங்கள் என கூறி அதிக அளவில் பெற்றோர் காத்திருக்கின்றனர்.
அனைவருக்கும் நியாயம் கிடைக்கவும், பள்ளி நிர்வாகிகளை இக்கட்டான சூழலுக்கு தள்ளாமல், நமது சங்கம் காப்பாற்ற வேண்டும்.
இரண்டு வருடத்திற்கான RTE நிலுவைத் தொகையும், இன்னமும் காலம் தாழ்த்தாமல் கிடைக்குமாறும் செய்ய வேண்டும்.
*பள்ளி நிர்வாகம் எதிர் நோக்கும் சவால்கள்*
*விடுமுறை தினமான - அக்டோபர் 2, RTE சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியான நேரம் முதல்,* ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களதுபெற்றோர்கள் மற்றும் பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்களும், நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் தங்களது குழந்தைகளை RTE Admission மூலம் சேர்க்கவேண்டும் என வற்புறுத்துகின்றனர்.
ஆனால் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை உடனடியாக கொடுக்க இயலாது நிலையில் உள்ளனர்.
நேரடியாக பள்ளி ஆரம்ப நாள் முதல் சேர்ந்த மாணவர்களை மட்டும் தற்போது சேர்க்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. பெற்றோர் உடனடியாக உரிய ஆவணங்கள் தங்கள் வசம் இல்லை என கூறுகின்றனர். கால அவகாசம் தேவை என கூறுகின்றனர்.
இது குறித்து அரசு மற்றும் கல்வித் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று கால அவகாசம் பெற்றுத் தந்தால் மட்டுமே, தற்போது பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மட்டும் சேர்க்க முடியும் என அரசு அறிவித்துள்ளதை செயல் படுத்த முடியும்.
எனவே தமிழக அரசு இதன் மீது உடனடி கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.