அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலம் தழுவிய   ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியம்,  ஜூலை-1 முதல் அகவிலைப்படி உயர்வு, ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்ற பணியை தவிர்த்து Record Clerk பணிசெய்வதால் மாணவர்களுக்கு கற்பித்தல் செய்யும் பணி பாதிக்கிறது  எனவே ஆசிரியர்களை கற்பித்தல் பணி செய்யவிடக்கோரி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 29.11.2022 செவ்வாய்கிழமை மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.எஸ் செல்வகுமார் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் எ.திருஞானசம்பந்தம் வரவேற்று பேசினார்.  

வாழ்த்துரை

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு ஆரம்ப்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட  செயலாளர் ஆ.சீனிவாசன், தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எஸ்.இராஜேஸ்கண்ணா, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஜெ.சுந்தர், தமிழ்நாடு உருதுவழி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ், ஜாக்டோ ஜியோ மாவட்ட செய்தி தொடர்பாளர் வாரா, தமிழ்நாடு மேனிலைப்பளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கே.முத்தமிழ்செல்வன், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜி.சீனிவாசன் , தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கே.குணசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

மாவட்ட துணைத்தலைவர்கள் வி.பார்த்திபன், என்.ராஜ்குமார், எம்.உலகநீதி, மாவட்ட இணைச்செயலாளர்கள் எம்.’ஜி.சங்கர், டி.ஞானசேகரன், ஆர்.ஜெயராமன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தனசேகரன், சி.சிவகுமார், எம்.சரவணன், எ.ஆனந்தன், ஜெ.சுந்தரம், வி.கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்   மாவட்ட பொருளாளர் ஜெ.காந்தி, செய்தித்தொடர்பு செயலாளர் டி.கிருஷ்ணன், சட்டச்செயலாளர் திவ்விய பிரபு, மகளிர் அணி செயலாளர் டி.ஜெயந்தி ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர்.

கோரிக்கைகள் 

1. பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் படுத்த கோரி 

2. ஜூலை-1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கிட கோரி,

3. ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்ற பணியை தவிர்த்து Record Clerk பணிசெய்வதால் மாணவர்களுக்கு கற்பித்தல் செய்யும் பணி பாதிக்கிறது  எனவே ஆசிரியர்களை கற்பித்தல் பணி செய்யவிடக்கோரி

4. முடக்கி வைக்கப்பட்டுள்ள E.ட-யை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை கேட்டு 

5. 2004 முதல் 2006 வரையில் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்ய

6. உயர்கல்வி தகுதிக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கிய ஊக்க ஊதிய திட்டத்தை எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே வழங்கக்கோரி 

7. ஒவ்வொரு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளிலும்குறைந்தது 8- பட்டதாரி ஆசிரியர்கள் கேட்டு 

8. அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET விலக்கு கேட்டு 

9. மருத்துவ விடுப்பு சான்றிதழ் பெறுவதற்கு புதிய சிக்கல்களை உருவாக்கி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் உள்ளங்களை புண்படுத்துவதை கைவிடக்கோரி 

10. அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அக்டோபர் - 2022 மாத ஊதியம் உடனே வழங்கிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.