டிடிசிபி அனுமதி வழங்க முடியாவிட்டால் கட்டியுள்ள பணத்தை முழுமையாக திருப்பித் தாருங்கள்.....!?

 டிடிசிபி அனுமதி வழங்க முடியாவிட்டால் கட்டியுள்ள பணத்தை முழுமையாக திருப்பித் தாருங்கள்.....!?

CMDA/DTCP அதிகாரிகள் கவனத்திற்கு.....!

அரசாணை எண். 76 இன் படி தனியார் பள்ளி கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப் பதற்காகவும் ,விண்ண பித்து  காத்திருக்கும் பள்ளி நிர்வாகிகள் டி டி சி பி  இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் தத்தளிக்கிறார்கள்.. டிடிசிபி இணையதளம் கடந்த  15 நாட்களாக  முடக்கப்பட்டுள்ளது. இப்படி இருந்தால்  31.12.2022க்குள் எப்படி விண்ணப்பிக்க முடியும்?

 அரசு ஆணை வெளியிட்டு விட்டு இணையதளத்தை முடக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த 15 நாட்களாக டிடிசிபி  அலுவலக இணையதளம் அரசாணை எண். 76 இன் படி இயங்கவில்லை. சம்பந்தப்பட்டஉயர் அதிகாரிகள் உடனடியாக இணையதளத்தை இயக்க வேண்டிய பணிகளை உடனே தொடங்கிட வேண்டும்..

இது சம்பந்தமாக மாண்புமிகு. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்..

விண்ணப்பிக்கும்/ விண்ணப்பித்து காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்காக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக மீண்டும் தாக்கல் செய்வோம்..

 டிடிசிபி அனுமதி வழங்க முடியாவிட்டால் கட்டியுள்ள பணத்தை முழுமையாக திருப்பித் தாருங்கள்..என்று தமிழ்நாடு  நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.