தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றித் திரிந்த 3 யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து10க்கும் மேற்பட்ட யானைகள் முகnமிட்டுள்ளன.அந்த யானைகள் அடிக்கடி கிராமத்தில் புகுந்தும், சாலையில் சுற்றித்திரிவதால் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குழு அமைத்து தீவிரமாக யானைகளின் நடமாட்டததை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மரக்கட்டn வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் நேற்று பகல் நேரத்தில் தேன்கனிக்கோட்டை அய்யூர் செல்லும் சாலையில் உள்ள தலசூர் கிராமத்தில் சாலை நின்று கொண்டிருந்தன.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அதிர்ச்சிரைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் சுற்றுந்த யானைகள் பார்த்து கிராம மக்கள் அச்சமடைந்தனர் .தகவல் அறிந்த தேன்கோட்டை வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும், அதிக ஒலி எழுப்பியும் யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி யடித்தனர். அதன் பின் வாகன போக்குவரத்து சீரானது யானைகள் அடிக்கடி சாலையில் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதனால் வனத்துறையினர் ஒரு குழு அமைத்து அப்பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
B. S. Prakash