போக்சோ என்றொரு கன்னிவெடி...

 *போக்சோ என்றொரு கன்னிவெடி...

 கன்னிவெடியின் மீது கால் வைத்தால் நிமிடத்தில் செத்து விடலாம், எல்லாம் முடிந்து விடும். அதைவிட  மோசமானது *போக்சோ சட்டம்.*  மானம், மரியாதை எல்லாம் காற்றில் பறந்து விட, மீதம் இருக்கப் போவது உயிருள்ள பிணம் மட்டுமே.

 கடந்த மூன்று மாதங்களில் கரூர் மாவட்டத்தில்  மட்டும்  இரண்டு ஆசிரியர்கள் இந்தப் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதலாவதாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது குற்றமில்லை என பொதுமக்களே சாலை மறியலில் இறங்கிவிட்டனர். இரண்டாவதாக கைது செய்யப்பட்டவர் செப்டம்பர் மாதத்தின் இறுதி நாட்களின் மாற்றுப் பணி காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை எனவும், நடப்பு அக்டோபர் மாதத்தின் முதல் 10 நாட்கள் விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த இரண்டாம் நாளே புகார் கிளம்பி இருக்கிறது எனவும் தெரிவிக்கிறார்கள்.  *ஆக மேற்கண்ட இரண்டுமே பொய் குற்றச்சாட்டுகள் என தெளிவாகிறது*

காவல்துறை பெற்ற புகாரை தீர விசாரிக்கிறதா..?என்றால்... மேற்கண்ட இரு நிகழ்வுகளிலும் சரிவர விசாரிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

'நமக்கு ஏன் வம்பு...

கேசைப் போட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விடுவோம். அதற்குப்பின் புகார் கொடுத்தவராச்சு... 

குற்றவாளியாச்சு.... 

நீதிமன்றமாச்சு.... எங்கள் வேலை முடிந்தது.' என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. 

*'குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தன்னை நிரபராதி என நிரூபிக்க 10 ஆண்டுகள் ஆகிவிடும், அதற்குள் அவர்களின் வாழ்க்கை முடிந்து விடும்'.* என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாமலும் இல்லை.... கவலைப்படுவதாகவும் இல்லை

 பொய்ப் புகாரில் சிறைக்குப் போன ஆசிரியரின் மானம், மரியாதை பற்றியும் அவரின் குடும்பம் பற்றியும் யாருக்கும் கவலை இல்லை.

*ஓர் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கலாம் என நம்பும் சமூகம், அதிகார வர்க்கம்...... 'வீட்டுப்பாடம் செய்யாத, ஒழுக்கம் இல்லாத, தவறு செய்யும் மாணவ மாணவியர்..... அதை மறைக்க, ஆசிரியர் மீதே பழி சுமத்தலாம் என்ற எளிய உளவியலை, பாமரன் முதல் அதிகார வர்க்கம் வரை சிந்திக்க மறுப்பது ஏன்.....?*

 சாதாரண குடிமகனுக்கு வகுத்த சட்டங்களை பள்ளிக்கூடங்களிலும் பயன்படுத்தினால், ஆசிரியர்கள் இப்படியாக சிறைக்குத்தான் செல்ல வேண்டும்.

 ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இதெல்லாம் தெரிந்திருந்தும், சட்டத் திருத்தங்கள் செய்தால் நமக்கு பிரச்சனை வந்து விடுமோ என அஞ்சுகிறார்கள் போலும்....

 ஆகவே, மாணவன்/மாணவி  *வீட்டுப்பாடம் செய்ய வில்லை எனில், உங்கள் வகுப்பிலேயே அமர்ந்து செய்யச் சொல்லுங்கள்.*

*ஒழுக்கக் குறைவை கண்டிக்காதீர்கள், மதிப்பெண் குறைந்தால் ஏனென்று கேட்காதீர்கள்,*

நாம் கண்டிக்க போய், நம் மீது பழி சுமத்தப்பட்டால், சிறைச்சாலைக்குச்  செல்ல நேரிடலாம். அதுகூடப் பரவாயில்லை. 

*நம்மை  மட்டுமே நம்பித்தான் நமது  குடும்பம் இருக்கிறது,   குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களைத் தெருவில் நிறுத்த முடியாது* 

மதிப்பெண் குறைந்ததற்காக நடவடிக்கை எடுத்து *சஸ்பெண்ட் செய்யப்பட்டால், அவற்றை எதிர்கொள்வது என்பது ஜெயிலுக்கு போவதை காட்டிலும் எளிதானது*

 இறுதியாக....

2021 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம், அரசுப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வு  நடத்தியது. இதில் தெரிவு  செய்யப்பட்ட சுமார் 240 பேரை முதுகலை வேதியியல் ஆசிரியராகப் பணி நியமனம் பெற,  13.10.2022 அன்று சென்னைக்கு அழைத்திருந்தது பள்ளிக் கல்வித்துறை. 

இந்த 240 பேரில் வெறும் 39 பேர் மட்டுமே 23 - 30 வயதுடையவர்கள். அதாவது 16.25சதவீதம் பேர் மட்டுமே. இதே ஆசிரியர் தேர்வு வாரியம் 2004 ஆம் ஆண்டு போட்டி தேர்வு நடத்தி வெற்றி பெற்றவர்களில் 23 முதல் 30 வரை வயது உடையவர்கள் தோராயமாக 50% பேர். 

2004 வரை போட்டித் தேர்வுகளின் மூலம் பணிநியமனம் செய்யப்படவில்லை என்றாலும்கூட 50% என்பதை 40% ஆக எடுத்துக் கொள்ளலாம்.

ஆக கடந்த 20 ஆண்டுகளில்  30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆசிரியராக பணிபுரிய விரும்புவது, 40%லிருந்து  16% ஆக குறைந்திருக்கிறது.

 அதாவது *இன்றைய தலைமுறையினர் ஆசிரியராகப் பணியாற்ற விரும்பவில்லை என்பதே மேற்கண்ட தரவுகள் நிரரூபிக்கின்றது. அடுத்த 20 ஆண்டுகளில் இது பூஜ்ஜியம் ஆகும்.*

*தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கும் கூட வடநாட்டவர்கள் இறக்குமதி செய்யும் காலம் வரும்*

ஆக

அரசு பள்ளிகளை காப்பாற்ற வேண்டும் என்றால் *போக்சோ  சட்டத்தில்* உரிய திருத்தம் செய்து குற்றச்சாட்டு குறித்து முறையான விசாரணை செய்து  குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

புகாரின் அடிப்படையில் மட்டும் ஒருவரை குற்றவாளியாக எடுத்த எடுப்பிலேயே கைது செய்யக்கூடாது.

மேற்கண்ட முறையில் சட்டத்தை திருத்தம் செய்யவில்லை என்றால்......

இனி...

*தமிழ்ச் சமுதாயம் மெல்ல நாசமாய் போகும்.....*