தசரா திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார திருவிழா,

 தசரா திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார திருவிழா,

 கிருஷ்ணகிரி மாவட்டம்,கெலமங்கலத்தில் கிராம தேவதையான அம்மன்  கோயிலில் அம்மனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள், செய்து அலங்கரிக்கப்பட்ட சுவாமியை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்,

 அம்மன் ஊர்வலமாக கொண்டு சென்று, தெலுங்கு துவக்கப்பள்ளி அருகிலுள்ள ஆலமரத்தில் வன்னி மரம் என்ற மரக்கட்டையை கட்டி அந்த மரத்தின் அருகே அலங்காரம் செய்த அம்மன், அழகர், விக்ரஹம் கொண்ட பல்லக்கு முன், வில் அம்பு மூலம் அந்த மரத்தை குறிவைத்து அடித்து சூரசம்ஹாரம் செய்கின்றனர், பிறகு அங்கே விசேஷ பூஜை நடத்தி அந்த மரத்தின் இலைகளை பக்தர்களுக்கு அனைவருக்கும் வழங்குகிறார்கள், இதை செய்தால் கிராமத்திற்கு எந்த துஷ்ட சக்திகளும் வராமல் காப்பாற்றும் என்பது ஐதீகம், இதை முன்னிட்டு இன்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது அதன் பிறகு அம்மன் கோயிலுக்கு வந்தது பின்  தீபாராதனை தீர்த்த பிரசாதம் வழங்கிய பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.

 பின்பு அம்மனுக்கு சீர்வரிசை கர்ணம் சீனிவாஸ் என்ற குடும்பத்தினர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள், அதேபோல் இந்த ஆண்டும் அவர் வீட்டு அருகில் அம்மனுக்கு இவர் குடும்பத்தினர் பிரபாகர் . கர்ணம் சீனிவாஸ். குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் அனைவரும் அம்மனுக்கு சீர்வரிசை கொடுத்து ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைக்கின்றனர்.

B. S. Prakash