அப்பாவு பிள்ளை பொன்னம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் விழா

அப்பாவு பிள்ளை பொன்னம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை,தளி,கெலமங்கலம்,அஞ்செட்டி,ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா *அப்பாவு பிள்ளை பொன்னம்மாள்*நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது,

இவ்விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.A.மனோகரன் தலைமை வகித்தார், 

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் திரு செல்வபெருந்தகை சிறப்புரை ஆற்றி,தளி சட்டமன்ற உறுப்பினர் T.ராமச்சந்திரன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ் ஆகியோருடன் இணைந்து மாணவ மாணவிகளுக்கு 2500 ஊக்கத் தொகை வழங்கினார்,

விழா ஏற்பாடுகளை அப்பாவு பொன்னம்மாள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் K.A. ஜோதிபிரகாஷ்,   கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கேசவமூர்த்தி  காங்கிரஸ் பிரமுகர் வீரமுனிராஜ்,காங்கிரஸ் மாநில செயலாளர் அன்மர் ஆகியோர் செய்தனர்,

மாணவ,மாணவிகள் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரிய ஆசிரியைகள்,பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.

B. S. Prakash