கள்ளக்குறிச்சி பள்ளி ஓரிரு தினங்களில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு ..!

 கள்ளக்குறிச்சி பள்ளி ஓரிரு தினங்களில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு ..!


ஒரு மாதத்திற்குள் கனியாமூர் தனியார் பள்ளி முழுமையாக இயங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரு மாதத்திற்குள் கனியாமூர் தனியார் பள்ளி முழுமையாக இயங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கலவரத்தில், கனியாமூர் பள்ளி முழுவதுமாக சேதமடைந்துள்ள நிலையில், ஜூலை மாதம் 13ம் தேதி முதல் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கனியாமூர் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்பதாவது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தற்போது மாற்று இடத்தில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் ஆசிரியர்கள் ஐந்து பேரும் மாலையில் சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையாக வாய்ப்புகள் உள்ளது. கோர்ட்டு உத்தரவுப்படி தாளாளர், செயலாளர், முதல்வர் மூன்று பேரும் மதுரையிலும், இரண்டு ஆசிரியைகளும் சேலத்திலும் தங்கி, காவல் நிலையத்தில் கையெழுத்திகூறப்படுகிறது.

இதற்கிடையே, இன்னும் சில தினங்களில் பள்ளி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து, விரைவாக சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிவு பெற்றவுடன் 5 முதல் 8 வகுப்பு வரையிலும், அதன் பிறகு 1 முதல் 4 வகுப்பு வரையிலும் பள்ளி வகுப்புகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்