உளுந்தூர்பேட்டை நகராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்த ஆய்வு
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதாள சாக்கடை இணைப்பு உடனடியாக வழங்குதல் புதிய பேருந்து நிலையம், மற்றும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பைப் லைன் சீரமைத்தல்,மீன் அங்காடி அமைத்தல் உள்ளிட்ட உளுந்தூர்பேட்டை நகராட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவதாஸ்மீனா அவர்கள் திடீர் ஆய்வு செய்தார். நகராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்வதாக உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.ஸ்வரண்குமார் அவர்கள், மண்டல இயக்குனர் திரு. குபேந்திரன் அவர்கள், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மணிக்கண்ணன் அவர்கள், நகர மன்ற தலைவர் திரு. திருநாவுக்கரசு அவர்கள், துணைத்தலைவர் திரு. வைத்தியநாதன் அவர்கள், நகராட்சி ஆணையர் திரு.சரவணன் அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Kallakkurichi Reporter. G. Murugan