முதல்முறையாக தேசிய கொடி ஏற்றி வைத்தார் மேயர் சத்யா
ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி முதல்முறையாக தேசிய கொடி ஏற்றி வைத்தார் மேயர் சத்யா
இந்தியா சுதந்திரமடைந்து 75ஆம் ஆண்டை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும்நிலையில்
ஒசூர் மாநகராட்சியாக தரம் உயர்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளநிலையில்
ஒசூர் மாநகர அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி முதல்முறையாக ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்..
பின்னர் சுதந்திர தினவிழாவில், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த போராளிகள்,தியாகிகளை நினைவுகூர்ந்து மாநகர மேயர்,ஆணையாளர்,துணை மேயர் ஆகியோர் உறையாற்றினர்..
பின்னர் மாமன்ற உறுப்பினர்கள்,மாநகர ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தையொட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
Hosur Reporter. E. V. Palaniyappan