ரூபாய் 4564 லட்சம் மதிப்பீட்டில்திட்டப் பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்!!

ரூபாய் 4564 லட்சம் மதிப்பீட்டில்திட்டப் பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன்  துவக்கி வைத்தார்!!

ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் கோட்டம் பரமக்குடி உட்கோட்டத்தின் மூலம் ரூபாய் 4564 லட்சம் மதிப்பீட்டில்திட்டப் பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று துவக்கி வைத்தார்!!

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ராமநாதபுரம் கோட்டம், பரமக்குடி உட்கோட்டத்தின் மூலம் ரூபாய் 3140 லட்சம் மதிப்பீட்டில் 3.60 கிலோ மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட பார்த்திபனூர் புறவழிச் சாலை அமைப்பதற்கான திட்டத்தினை இன்று நான் துவக்கி வைத்தேன் இந்த புறவழிச் சாலையின் மூலம் பார்த்திபனூர், கள்ளிக்குடி,நெல்மடூர், சூரியக்கணேந்தல், நரிக்குடி,அபிராமம் மற்றும் கமுதியாகிய ஊர்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த சாலையில் இரண்டு உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.மேலும் நெடுஞ்சாலைத்துறை நபரர்டுமற்றும் கிராம சாலைகள் கோட்டம் பரமக்குடி மூலம் மதுரை தனுஷ்கோடி சாலைசந்திக்கும் ராமநாதபுரம் மேலூர் சாலை வழி,பொட்டி தட்டி, மந்தி வலசை, கல்லடி ஏந்தல், வல்லம்,பகைவென்றி சாலையில் வைகை ஆற்றில் குறுக்கே ரூபாய் 1424 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான திட்டமும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலமானது 218.00 மீட்டர் நிலமும் 12 தூண்களும் 11 கண்களும9.95 மீட்டர் அகலமும் 7.50 மீட்டர் ஓடுபாதையும் 19.80 மீட்டர் கொண்ட கண்களுமாக கட்டப்படஉள்ளது. இந்த பால்த்தின் மூலம் பொட்டி தட்டி, மந்தி வலசை, கல்லடி ஏந்தல்,வல்லம், பகைவென்றி ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட உள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலினின், பொதுமக்களிடையே போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்கள் காவல் துறை சார்பாக 11.8.2022 முதல் ஒரு வார காலத்திற்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட மாநாடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடுமுதல்அமைச்சர்போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தினை ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படுத்தி மக்கள் அனைவரும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து நன்கு அறியும் வகையில் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள், அதனை தொடர்ந்து பரமக்குடி நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சுமார் 600 பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பொதுமக்களும், இளைஞர்களும் யாரும் போதைப் பொருட்களுக்கு அடிமையாக விட வேண்டாம் என தங்களை கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து பரமக்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் போதை பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர். இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிட்டாம் வர்கிஷ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, ராமநாதபுர நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ் கனி| பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன் மாவட்ட வருவாய் அலுவலர் ஏ எம். காமாட்சி கணேசன் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் (கட்டுபானம் மற்றும் பராமரிப்பு )மாரிமுத்து ராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வி. சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன்,பரமக்குடி நகர மன்ற தலைவர் காந்தி கருணாநிதி, நெடுஞ்சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் பரமக்குடி கண்ணன், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி