தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் தீர்மானங்கள்

 தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் தீர்மானங்கள் 

1. பெரிய சேலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஸ்பெஷல் மில் அரவையை தொடங்க வேண்டும் ஏனெனில் தற்போது கரும்பு வெட்டு கூலி மற்றும் மாமுல் போன்றவை அதிகமாக உள்ளதால் விவசாயிகளின் குறைந்தபட்ச லாபம் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் எனவே ஸ்பெஷல் அரவையை தொடங்கி வைப்பதன் மூலம் விவசாயம் நலனை மேம்படுத்தும் வகையில் அமையும் இதனை தமிழ்நாடு அரசு உடனே செயல்படுத்தி கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

2. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் குறைதீர்க்கும் மனுக்கள் அனைத்தும்  நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகின்றது எனவே இந்த மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

3. கிளாாப்பாளையத்திலிருந்து களமருதூர் ஏரிக்கு செல்லும் கழிவு நீர் கால்வாயை தூர்வாரி கொடுக்க வேண்டும் மற்றும் வயல்வெளியில் இருந்து உபரி நீர் வெளியேறும்  வாய்க்கால் தூர்வாருதல் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்

 தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கம்