18,000 பெண்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு: தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் எடுத்த முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி...!

18,000 பெண்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு: தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் எடுத்த முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி...!

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு சுமார் 1 டிரில்லியன் டாலர் அளவிலான வர்த்தக வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் டாடா குழுமம் சில மாதங்களுக்கு முன்பு இத்துறையில் இறங்க முடிவு செய்து, இதற்காகப் பிரத்தியேகமாகத் தொழிற்சாலையைத் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்க முடிவு செய்தது.


டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தான் தலைமை அலுவலகத்தைக் கொண்டு இயங்கி இன்று மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து நிற்கிறது. இந்நிலையில் டாடா குழுமம் தனது எலக்ட்ரானிக்ஸ்  பொருட்கள் தயாரிக்கும் புதிய முயற்சிக்கு மீண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைத் தேர்வு செய்தது.

டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதற்காகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூரில் அருகே சுமார் 4,684 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.

இந்த நிறுவனம்  இங்கு உருவாக்கப்பட்ட தற்கு முக்கிய காரணமாக   தளி சட்டமன்ற உறுப்பினர் டி. ராமச்சந்திரன் திகழ்ந்து வருகிறார்.  இவர் எடுத்த சிறு முயற்சியின் காரணமாக இந்த நிறுவனம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் இங்கு உருவானதால் இதனை சார்ந்து பல சிறு தொழிற்சாலைகளும் பெரும் தொழிற்சாலைகளும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.  இதன் மூலம் இன்னும் பல்லாயிரக்கணக்கான  இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான உத்தரவாதமான வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளது.


பாக்ஸ்கான், விஸ்திரான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய திறன்களைப் பயன்படுத்திப் பல ஆயிரம் கோடிக்கு ஒவ்வொரு வருடமும் எலக்டரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் நிலையில் இந்த இடைவெளியை நிரப்ப டாடா களமிறங்கியது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை

டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் முதல் தொழிற்சாலை பணிகள் வேகமாக நடந்துவரும் நிலையில் இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தொழிற்சாலை கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் விரைவில் உற்பத்தி பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

18,000 பேருக்கு வேலை

டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டி வருகிறது. சுமார் 4,684 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகி வரும் இந்தத் தொழிற்சாலையில் சுமார் 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. கடந்த சில வருடத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாடா மட்டும் அல்லாமல், ஓலா, எதர் உட்படப் பல நிறுவனங்கள் வந்துள்ளது. என்ன காரணம் தெரியுமா..?

பாராட்டு

டாடா-வின் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் அமைக்கும் திட்டம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாடாவின் வருகைக்குப் பின்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கியத் தொழிற்சாலை நகரமாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐடி-க்குச் சென்னை, கோவை

தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஐடி, டிஜிட்டல் சேவை, நிதியியல் சேவை நிறுவனங்கள் அனைத்தும் சென்னை-யை நோக்கி வரும் நிலையில், இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் இப்பிரிவு நிறுவனங்கள் கோயம்புத்தூர்-க்கும் வருகிறது.

உற்பத்தி-க்கு கிருஷ்ணகிரி, திருநெல்வேலி

ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் ஓசூர்-க்கும், மாநிலத்தின் பிற மாநிலங்களை நோக்கிப் படையெடுத்து வருகிறது. குறிப்பாக உள்நாட்டுச் சந்தைக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது ஓசூரை முக்கிய டார்கெட்-ஆக மாற்றியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் முக்கியத் தொழில் நகரமாக மாற என்ன காரணம் தெரியுமா..?

50 ஆண்டுக்கு முன் விதை

1973ஆம் ஆண்டு அதாவது 50 வருடங்களுக்கு முன்பு மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்த ஓசூர்-ஐ தமிழ்நாடு அரசின் சிபிகாட் வாயிலாகத் தொழிற்துறை நிறுவனங்களை ஈர்க்கவும், வர்த்தக மற்றும் உற்பத்தியை உருவாக்கவும் ராணிப்பேட்டையைச் சேர்த்து மொத்த 2 பகுதிகளைப் பெரிய அளவில் மேம்படுத்தியது.

MSME நிறுவனங்களின் கூடாரம்

அதன் பின்பு ஒசூர் மெல்ல மெல்ல தன்னுள் புதைத்து வைத்திருந்த வைரத்தை வெளியில் கொண்டு வர துவங்கியது. ஒசூர் தற்போது பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகளவில் உதவும் சப்ளையர்கள் அதாவது உதிரிப்பாகங்கள் மற்றும் இதர பொருட்களை உற்பத்தி செய்யும் MSME நிறுவனங்களை அதிகளவில் வைத்துள்ளது.

போக்குவரத்து

இதைவிட முக்கியமாக ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பிற மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க ஏதுவான மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை போக்குவரத்துச் சமீபத்தில் பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. இதுதான் புதிய மற்றும் பெரு நிறுவனங்களை ஈர்க்க முக்கியக் காரணமாக உள்ளது.

சிப்காட்

இந்த வளர்ச்சியை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசின் சிப்காட் அமைப்பின் 3வது மற்றும் 4வது கட்ட வளர்ச்சி திட்டத்திற்குச் சுமார் 2,223 ஏக்கர் நிலம் தேவை, இதில் 1,400 ஏக்கர் நிலத்தை அரசு சில மாதங்களுக்கு முன்பே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது