ஆதிதிராவிட நல துறையால் வழங்கப்பட்ட பட்டா அபகரிப்பு

 ஆதிதிராவிட நல துறையால்  வழங்கப்பட்ட பட்டா அபகரிப்பு


இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வேலங்குடி குரூப் வேலங்குடி கிராம மக்களுக்கு அரசாங்கம்  ஆதிதிராவிட நல துறையால்  வழங்கப்பட்ட பட்டா அபகரிப்பு தொடர்பாக29:06:22  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டு இன்று 30:06:22 மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உதவியாளர் மூலம் பரிசீலிக்கப்பட்டு ஆதித் திராவிட நலத்துறைக்கு பரிந்துரை செய்தார் அது சமயம் அதற்கான பயனாளிகளின் ஆவணங்கள் அனைத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது கூடிய விரைவில் பயனாளிகளுக்கு அந்த இடங்கள் திருப்பி ஒப்படைப்பு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது இதற்கு பேரு உதவியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க தலைவர் தோழர்.பா.சண்முகராஜன் ,  தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் Dr.S.குமரகுருபரன் அவர்களுக்கும், சங்க நிர்வாகிகள்  அனைவருக்கும் கிராம மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...