உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது...? ஸ்டாலின் வீட்டில் நடப்பது என்ன...?!

உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது...?  ஸ்டாலின் வீட்டில் நடப்பது என்ன...?!உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் போகிறார், அவருக்கு எந்த துறை கொடுக்கப் போகிறார்கள் என்பது தான் கடந்த சில மாதங்களாக திமுகவினர் மத்தியில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. 

எந்தநேரத்திலும் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தள்ளிப்போகலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபோதே அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் விமர்சனங்களை தவிர்க்கும் விதமாக அப்போது மகனுக்கு நோ சொல்லிவிட்டார் ஸ்டாலின். 

சில மாதங்கள் போகட்டும் பார்க்கலாம் என ஸ்டாலின் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. 

கொரோனா இரண்டாவது மூன்றாவது அலைகள், கனமழை, வெள்ளம் என தொடர்ந்து அரசு இயந்திரம் துரிதகதியில் இயங்கிக்கொண்டிருந்ததால், அமைச்சரவை மாற்றம் என சொல்லி பிரேக் போட ஸ்டாலின் தயாராக இல்லை. திரைப்பட பணிகளை முடித்துவிட்டு வா அதன் பின் பதவியேற்கலாம் என ஸ்டாலின் சொல்லியதாகவும் கூறப்பட்டது.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள என பலரும் உதயநிதியை அடுத்த தலைமையாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். சட்டமன்றத்திலும், பொது மேடைகளிலும் அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

மே அல்லது ஜூன் மாதம் உதயநிதி அமைச்சராக பதவியேற்க உள்ளதாக செய்திகள் வட்டமடித்த நிலையில் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. 

ஸ்டாலின் தலைமையில்  திமுக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் மே 7ஆம் தேதி முரசொலியில் விளம்பரங்கள் அணிவகுத்தன. ஆனால் அதில் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து திமுக முக்கிய புள்ளிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“ஸ்டாலினுக்கும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற ஆசை உள்ளூற இருக்கிறது. ஆனால் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். 

ஆனால் துர்கா ஸ்டாலின் ஆரம்பம் முதலே நம்ம உதயாவை அமைச்சராக்குங்க என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிரசாந்த் கிஷோர் உதயநிதியை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஆலோசனை வழங்கியபோது மகனுக்காக முதல்வரிடம் பேசி சம்மதிக்க வைத்தவர் துர்கா.

ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியை கட்சிக்குள் முன்னிலைப்படுத்துவதற்கு ஏதுவாக கலைஞர் உருவாக்கிய அஞ்சுகம் பிக்சர்ஸும், முரசொலி அறக்கட்டளையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பங்குகளும் உதயநிதி பெயருக்கு மாற்றப்பட உள்ளன. கலைஞர் தொலைக்காட்சி பங்குகளும் விரைவில் உதயநிதி வசம் வர உள்ளன.