ஒசூரில் இபிஎஸ் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் கிரிக்கெட் தொடர்: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைப்பு

 ஒசூரில் இபிஎஸ் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் கிரிக்கெட் தொடர்: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைப்பு


 

ஓசூர் மாநகராட்சி ஐடிஐ மைதானத்தில் முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான, எடப்பாடி கே பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் மிடிகிரிப்பள்ளி "டேஞ்சர் டிராகன்" அணி இணைந்து கிரிக்கெட் போட்டிகள் நடத்துகின்றன. 

இந்த போட்டியின் துவக்க நாளான இன்று, அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்  விளையாட்டு துறை அமைச்சர் பா. பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். 

இன்று துவங்கி தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் வேலூர், திருப்பத்தூர் ,காரைக்குடி ,தர்மபுரி சேலம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. வரும் ஜூன் மாதம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ 25 ஆயிரம்  மற்றும் ட்ரோபியும், இரண்டாவது பரிசாக ரூ 20 ஆயிரம் ட்ரோபியும், மூன்றாவது பரிசாக ரூ 15 ஆயிரம், ட்ரோபியும் வழங்கப்பட உள்ளது. 

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ்,  ஓசூர் தெற்கு பகுதி கழக செயலாளர் வாசுதேவன் , மாவட்ட பிரதிநிதி ,  ராமகிருஷ்ணன், ஸ்ரீதர், கோபி, சிவா, நாகேஷ், ரவிகிரண், உள்ளிட்டோர் செய்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு தலைவர் ஜேபி என்கின்ற ஜெயிக்க பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல குழு தலைவர் புருஷோத்தமன் ரெட்டி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், ராமசாமி ரெட்டி, ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன், சோம சேகர்   , நாகராஜ், நாராயணசாமி,சாக் அப்பா, பாலுசாமி,கிருஷ்ணன், சரவணன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு.

ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்