சானசந்திரம் பகுதியில் ரூ.1.50கோடி மதிப்பீட்டில் நவின எரிவாயு தகனமேடை

 சானசந்திரம் பகுதியில் ரூ.1.50கோடி மதிப்பீட்டில் நவின எரிவாயு தகனமேடை


ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-29ல் சானசந்திரம் பகுதியில் 2021-2022ஆம் ஆண்டு மூலதன நிதியிலிருந்து ரூ.1.50கோடி மதிப்பீட்டில் நவின எரிவாயு தகனமேடை அமைக்கும் பணியை இன்று ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யாEx.MLA அவர்கள் பூமி பூசை செய்து துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம்,  பொறியாளர் ராஜேந்திரன்,  மண்டல தலைவர் புருஷோத்தமரெட்டி, மாநகர கவுன்சிலர்கள் தீல்ஷாத் ரகுமான், கிருஷ்ணவேணி ராஜி, வார்டு செயலாளர் ராஜேந்திரன், வார்டு கழக நிர்வாகிகள் பொன் வேல், செந்தில், கைலாஷ், மகேஷ், ஜெயராம் ரெட்டி, ராஜேஷ், மோகன் சிங்  கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hosur Reporter: E.V. Palaniyappan