சீரழியும் அரசுப்பள்ளி மாணவர்கள்: நடிகர் விஜய் தான் காரணமா...?

சீரழியும் அரசுப்பள்ளி மாணவர்கள்: நடிகர் விஜய் தான்  காரணமா...?

ஆசிரியருக்கு மாணாக்கர்கள் பயந்து நல்வழிப்பட்ட காலம் மலையேறி, ஒவ்வொரு நாளும் ஆசிரியரை மாணவர்கள் கிண்டல் செய்வது, வகுப்பறையில் ஆசிரியர் முன்னிலையில் அவமதிப்பு செய்வது என பல துயரங்கள் நடந்து வருகிறது.

இந்தியாவின் எதிர்கால தூண்கள் திரைமோகத்தில் மதியிழந்து செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது.

இந்நிலையில், எந்த  அரசு பள்ளியில் எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லாத வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில் மாணவர் ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டு இருக்கும் போதே, கடைசி இருக்கையில் ஆடுகிறார். இவர் விஜயின் பீஸ்ட் பட பாடலுக்கு ஆடுவதாக தெரிகிறது.

அவருடன் சேர்ந்து சில மாணவர்களும் ஆடும் மாணவரை உற்சாகப்படுத்த, அதனை கண்டுகொள்ளாத ஆசிரியை  ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்களுக்கு கற்பிப்போம் என்பதை போல பாடம் எடுத்து வருகிறார். இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி வைரலாகி வருகிறது.

இந்த மாணவர்கள் வகுப்பறையை திரையரங்கம் என்று நினைத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

இன்றைய சூழலில் திரையரங்கிற்கு சென்று நிம்மதியாக, அமைதியாக ஒரு படத்தை பார்வையிட முடிவதில்லை.  

அங்கே இவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ரொம்ப அதிகமாகத்தான் இருக்கிறது.  மற்றவர்கள் உணர்வை சற்றும் புரிந்துகொள்ளாமல் தாங்கள் மட்டும் சந்தோசமாக இருந்தால் போதும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.  இப்போது அதே எண்ணத்தில் தான் பள்ளிகளிலும் செயல்பட தொடங்கி விட்டார்கள்.

இவர்கள் இந்த அளவுக்கு சீரழிந்து போனதற்கு காரணம் இவர்களின் தலைவர்களாக  திகழ்கின்ற விஜய், ரஜினி, அஜித்  மற்றும் சில அரசியல் தலைவர்களும் காரணமாக  இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 ஏன் என்று சொன்னால் இத்தனை சீரழிவுகளையும் சகித்துக் கொண்டு இவர்கள் அனைவரும் அமைதியாக இருப்பது வேதனை அளிக்கிறது.

அமைச்சர்களும் இவர்களை ஆள்பவர்களும், நடிகர்களும்  மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்க சொல்லித்தான் அறிவுறுத்துகிறார்கள் தவிர இவர்கள் கண்டிக்கின்ற தைரியம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை.  

இவர்களின் ஓட்டு போய்விடும் என்கிற பயமா...?  இல்லை இவர்கள் நம்மை விட்டுப் போய் விடுவார்கள் என்கிற பயமா...??

உண்மையிலேயே நமது தமிழக முதலமைச்சருக்கு துணிவிருந்தால் இந்த மாணவர்களை கண்டித்து ஒரு அறிக்கை விடட்டும்....!

 தவறாக நடந்து கொள்ளும்  மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கட்டும்.  அப்போதாவது இவர்கள் திருந்துவார்களா என்று பார்க்கலாம்....!


Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்