மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: சட்டமன்றத்தில் தளி எம்.எல்.ஏ. T. ராமச்சந்திரன் பேச்சு......

 மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: சட்டமன்றத்தில் தளி எம்.எல்.ஏ. T. ராமச்சந்திரன் பேச்சு......

மேகதாது அணை விவகாரம், தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக நிற்கும் என பேச்சு.....

தளி சட்ட மன்ற உறுப்பினர் சட்ட பேரவையில் பட்ஜெட் கூட்ட தொடர் விவாதத்தின் போது பேசுகையில் காவிரி ஆறு என்பது தமிழர்களின் வாழ்வாதாரமாக உள்ளது காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அவ்வாறு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தினுடைய பாசன வசதி கூட்டு குடிநீர் திட்டங்கள் கேள்விக்குறியாக மாறிவிடும், டெல்டா மாவட்டங்களில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாலைவனமாக மாறிவிடும், எனவே மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு வரைபடம் எந்தவிதமான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது என்று கொண்டு வந்திருக்கிற அரசினர் தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் வரவேற்கிறோம். தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுக்கிற அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளுடைய நிலங்களை எடுத்து தொழில்பேட்டைகள் அமைப்பதை அரசு கைவிட வேண்டும், ஓசூரில் ஏற்கனவே  மூன்று தொழிற்பேட்டைகள் உள்ளன. தற்போது ஓசூரை அடுத்த நாகமங்கலம் அயர்னப்பள்ளி, உத்தனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 5000 ஏக்கர் விவசாயிகளுடைய நிலங்களை கையகப்படுத்தி அதற்கான முயற்சிகளை அரசு செய்து கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்களாக மாற வேண்டிய அபாயம் உள்ளது. எனவே  தொழில்பேட்டைக்கு விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

என்னுடைய தளி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, தனியார் கல்லூரியோ ஒன்றுகூட இல்லை, அங்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஓர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மா பயிரிடப்படுகிறது. மா விவசாயிகளுக்கு சில சமயங்களில் கட்டுப்படியாகின்ற வகையில் விலை கிடைப்பதில்லை. ஆகவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் சார்பில் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்  என்றார். மேலும் மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அரசின் சார்பில் அமைக்கப்பட்டால் வேலை வாய்ப்புகளும் பெருகும் என்றார்.

தென்பெண்ணை ஆற்றின் நீரை தளி தொகுதியில் உள்ள பாரண்டபள்ளி பைரமங்கலம், நாகமங்கலம் ஏரிகளுக்கு விடுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும் என மாண்புமிகு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார். தளி  தொகுதிக்கு உட்பட்ட அஞ்செட்டியில் அஞ்செட்டி தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை அமைக்க வேண்டும், தளி தொகுதியில் ஆண்டுக்கு 10 பேர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள். எனவே வனப்பகுதியை ஒட்டி சோலார் மின் வேலி அமைத்து கொடுக்க வேண்டும் என்றார்.

கொரோனா பேரிடர் காலம், கடுமையான நிதி நெருக்கடி, கடந்த காலங்களில் சரியான முறையில் நிதி வேளாண்மை கையாளாத காரணம், ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதி ஆதாரத்தை பகிர்ந்தளிக்காத காரணம் ஆகியவற்றால் கடும் நிதி நெருக்கடியிலும் புதிய வரிகள்ஏதும் விதிக்காமல் வரியில்லா ஒரு பட்ஜெட்டை இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம், என்றார். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன் அதேபோல தகுதி படைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்து இருப்பது இன்றைக்கு விவசாயிகள் மத்தியில் பெரிய நம்பிக்கையை இந்த அரசின் மீது ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆணவப் படுகொலைகளை தடுக்க அரசு தனி சட்டத்தை இயற்ற வேண்டும், 

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமான அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்குகின்ற திட்டம் இன்றைக்கு பெண்களுடைய உயர்கல்வி என்பது, இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் 20 சதவீதமாக இருக்கும்போது தமிழ்நாட்டு மட்டும் பெண்களுடைய உயர்கல்வி என்பது 46 சதவீதமாக இருக்கிறது. இதற்கு காரணம் திராவிட ஆட்சியில் பெண்களுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் அந்த வகையில் இன்றைக்கு இந்த ஆயிரம் ரூபாய் உயர் கல்வி உதவித்தொகை தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை வருங்காலத்தில் அதிகரிக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.