ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மார்ச் - 03
ராமநாதபுரம் மாவட்டம் அம்பேத்கரைட்பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!
ஆர்ப்பாட்டத்தில் மெத்தன போக்கு அதிகாரிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்திட வேண்டும் எனவும், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் தெளிச் சாத்தநல்லூர் கிராமத்தில் வளைய னேந்தல் அருகில் வசிக்கும் 147 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு அடிப்படை வசதி செய்து தராத பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலரையும் தெளிச்சாத்தநல்லூர் கிராம ஊராட்சி தலைவரையும் பணி நீக்கம் செய்யக் கோரியும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றே கால தாமதப்படுத்தும் ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு மின்சார வாரியம் கண்காணிப்பு பொறியாளர் (SE) மாவட்ட பொறியாளர் (E) பரமக்குடி வடக்கு (AD),
மற்றும் AE ஆகியோரையும் உடனடியாக பணி நீக்கம் செய்யக்கோரி யும்,மேற்கண்ட பகுதி மக்கள் சொத்துக்களை அபகரிக்கும் விதமாக கடந்த 25 ஆண்டுகளாக செயல்படும் சமூக விரோதிகளையும், அலைக்கழிக்கும் அனைத்து அரசு அதிகாரிகளையும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய கோரியும் போர்க்கால நடவடிக்கையாக அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மாநில தலைவர் வாத்தியார்.முருகன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஜான் தேவதாஸ்,கே.ஜான் கென்னடி ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர், முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர் வழக்குரைஞர் எம். செல்வம், ராஜேந்திர புலவர் உள்ளிட்ட கிராமப் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அரசு அதிகாரிகளைக் கண்டித்து கோசமிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு