தமிழ்நாட்டிலேயே காங்கிரஸ் கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் சேர்ப்பு: நாங்குநேரியில் சாதனை நிகழ்த்திய ரூபி மனோகரன்

 தமிழ்நாட்டிலேயே காங்கிரஸ் கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் சேர்ப்பு: நாங்குநேரியில் சாதனை நிகழ்த்திய ரூபி மனோகரன்


நாங்குநேரியில் சாதனை நிகழ்த்திய ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு, தேர்தல் பொறுப்பாளர் கௌரவ் கோகாய் பாராட்டு!!

காங்கிரஸ் கட்சியில் தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கையில், தமிழ்நாட்டிலேயே நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்த தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்-.ஏ.வை, அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கௌரவ் கோகாய் பாராட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் சார்பில், நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் இப்பணிகளைப் பார்வையிட,  அகில இந்திய காங்கிரஸ் அமைப்புத் தேர்தல் தமிழக பொறுப்பாளரான, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் கோகாய் எம்.பி., சென்னைக்கு வருகை தந்தார்.

அவர், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற, காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்புப் பணிகளை ஆய்வு செய்து ஒருங்கிணைக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டார். மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

கௌரவ் கோகாய் எம்.பி., பேசும்போது, டிஜிட்டல் முறையில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில், அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பவர்களின் விவரங்கள் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, இளம்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் நேரடிப் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். வருங்காலங்களில் காங்கிரஸ் பொறுப்புகளுக்கு இவர்களின் பெயரே பரிந்துரை செய்யப்படும். தமிழ்நாட்டில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்த்துவருவது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

முன்னதாக, தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாட்டிலேயே, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்துள்ள தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனை கௌரவ் கோகாய் எம்.பி., பாராட்டினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., துணை தேர்தல் அதிகாரிகள் டாக்டர் அஞ்சலி நிம்பல்கர், நெய்யாற்றின்கரை சனல் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் இளையராஜா