பள்ளி நிர்வாகிகள் யாரும் எந்த உறுதிமொழியும் எழுதி தர வேண்டாம்..

பள்ளி நிர்வாகிகள் யாரும் எந்த உறுதிமொழியும் எழுதி தர வேண்டாம்..

 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவின்றி தன்னிச்சையாக சுற்றறிக்கை வெளியிட்ட மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

 மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கையை மெட்ரிக் பள்ளி இயக்குனர் வெளியிட்டதாக பொய்யான செய்தியை பரப்பி வரும் ஊடகங்களை வன்மையாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் கண்டிக்கின்றோம்.

 இந்த அறிக்கையை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் முனைவர். ஆ.கருப்புசாமி வெளியிடவில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

 இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் நடத்த முடியாமல் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகி வாங்கிய கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட முடியாமல் மூடி இருக்கிற பள்ளிகளுக்கு சொத்து வரி, தொழில்வரி, நிலவரி, நீர்வரி, சர்வீஸ் டாக்ஸ் சேல்ஸ் டாக்ஸ் ஜிஎஸ்டி, பி.எஃப், இஎஸ்ஐ, ஓடாத வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ்,

எப் சி,  நடத்தாத தேர்வுகளுக்கு தேர்வுக்கட்டணம், கொடுக்காத அங்கீகாரத்திற்கு அங்கீகாரம் கட்டணம்,, கொடுக்குற அங்கீகாரத்திற்கும், வாங்குகிற சான்றிதழ் களுக்கும் லஞ்சமோ லஞ்சம், இந்தச் சூழ்நிலையில் வாழ்விழந்து தவிக்கும் தனியார் பள்ளிகளை வஞ்சிக்கும் நிலையில்

வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சி இருக்கும் மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அவசரமான தேவையற்ற உறுதிமொழி 

உத்தரவும்  அந்த உத்தரவை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டதாக பொய்யான செய்தியை  வெளியிட்டு ஒளிபரப்பி பொய்களையும் மெய்யாக்கி மக்களை குழப்பும் Big Braking News ஊடகங்களும் தனியார் பள்ளிகள் மீது என்ன வஞ்சமோ நாள்தோறும் பொய்களை பரப்பி வருகிறார்கள்..

 கிராமத்து பழமொழியாம் பொய் ஜொலிக்கிறது மெய் முழிக்கிறது

 என்பது போல் தனியார் பள்ளி நிர்வாகிகள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்  .

 தனியார் பள்ளி நிர்வாகிகளே நீங்கள் யாருக்கும் பயந்து எதையும் எழுதி தர வேண்டாம்..

 நாம் சுயநிதி பள்ளிகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைவரும் கட்டணம் கட்டவேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும் கட்டினால் மட்டும் தான் பாடம் நடத்த முடியும் பள்ளியை முறையாக நடத்த முடியும்..

 அரசு எதையும் நமக்கு இலவசமாக தருவதில்லை

நாம் ஏன் இலவசமாக  தரவேண்டும். எப்படித் தரமுடியும்?

 தரமான கல்வி வேண்டும் என்பவர்கள் நம்பிக்கையோடு நம் பள்ளியில்  சேர்த்திருக்கிறார்கள்.

 பணம் கட்ட முடியாதவர்கள் அரசு பள்ளிக்கு போகட்டும்.

 பணம் கேட்காதே கொடுக்காதே கேட்டால் நடவடிக்கை எடுப்போம் என்பதெல்லாம் பழைய கதை...

 இனி யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம்..

 பள்ளி நிர்வாகிகள் எதையும் எழுதி தர வேண்டாம்..

 பணம் வாங்க வேண்டாம் என்றால் அரசு அதிகாரிகள் நமது ஆசிரியர்களுக்கும் அனைவருக்கும் அனைத்து செலவுகளையும் அரசே  கொடுக்கட்டும்.

 வரி மேல் வரி போட்டு வசூலிக்கும் அரசும் அதிகாரிகளும் இந்தக் கொடிய நோய் தொற்று காலத்தில் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்களா?..

 எனவே யாரும் எவருக்கும்   எதையும் எழுதித் தர வேண்டாம் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் முடிவெடுத்துள்ளோம்

 முட்டாள்தனமாக யாரும் எழுதி கொடுத்து ஏமாந்தால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல..

 முதன்மை கல்வி அலுவலர்கள் வருவார்கள் போவார்கள்

 எழுதி தர வேண்டும் என்று சொன்னால் அவர்கள் மீது  எழுதுங்கள் புகாரை  சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

 தொல்லை கொடுப்பவர்களின் அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்பாட்டங்கள் நடத்துவோம்..

அதே தொலைக்காட்சிகளில் செய்திகளைச் சொல்வோம்..வெல்வோம்

நாளை சனிக்கிழமை 26ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு வாருங்கள் தவறு செய்யும் அதிகாரிகளின் முகத்திரையை கிழிப்போம் வாரீர்.

 சிஇஓ வின் உறுதிமொழி கடிதத்தை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளேன் 

அன்புடன் உங்கள் கே. ஆர்.நந்தகுமார் மாநில செயலாளர்..