அனைத்து சங்க தலைவர்களையும் பள்ளி நிர்வாகிகளையும் இரு கரம் கூப்பி அழைக்கின்றோம்.
சங்க பேதம் மறந்து பிரச்சனைகளின் அடிப்படையில் அனைத்து சங்கத் தலைவர்களும் நாளை காலை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவது மாபெரும் வெற்றியை தந்துள்ளது.
சங்கத் தலைவர்கள் திருவாளர்கள் டி. என். சி. இளங்கோவன் அவர்களும் மனோகரன் ஜெயக்குமார் அவர்களும் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன் அவர்களும் சீனிவாசன் அவர்களும் நீலன் அரசு அவர்களும் இன்ன பிற தலைவர்கள் அனைவரும் வருவதாகவும் அனைவரும் வரச் சொல்லியும் போடும் செய்திகள் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.. இதேபோல் நாம் அனைவரும் ஈகோ மறந்து ஒற்றுமையாக இருந்தால் நமது கோரிக்கைகள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் ஐயப்பாடு இல்லை. இந்த நிமிடம் முதல் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் வாருங்கள் உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.
நன்றியுடன் உங்கள்
கே ஆர் நந்தகுமார்.