நமது பிரச்சனைகள் தீர சென்னை நோக்கி திரண்டு வாருங்கள்: பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்.....

 நமது பிரச்சனைகள்  தீர சென்னை நோக்கி திரண்டு வாருங்கள்: பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்.....


பள்ளி நிர்வாகிகளுக்கு அன்பு வேண்டுகோள்.......

 இனிய வணக்கம்...

 தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு வந்துள்ள கஷ்டம் எதிரிகளுக்கு கூட வரக்கூடாது என்கிற அளவில் சொத்து வரி, தொழில் வரி, நிலவரி, நீர்வரி, சேல்ஸ் டாக்ஸ், சர்வீஸ் டாக்ஸ்,

ஜிஎஸ்டி, பள்ளி வாகனங்களுக்கான இருக்கை வரி, சாலைவரி, இன்சூரன்ஸ்,எப்.சி.வேக கட்டுப்பாட்டு கருவி,சிசிடிவி கேமரா, ஜிபிஆர்எஸ் கருவி பொருத்த வேண்டும், பிரதிபலிப்பு  ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்..

 பள்ளி கட்டிடங்களுக்கான  சி.எம்.டி.ஏ/, டி.டி.சி.பி,/எல்.பி. ஏ,கட்டிட அனுமதி.. இ. எஸ். ஐ. பி.எஃப்.அங்கீகாரம் பெறுவதற்கான பல்வேறு சான்றுகளை பெற கட்டணங்களை லஞ்சத்தை அதிகாரிகள்உயர்த்தி விட்டார்கள்..

மூன்றாண்டு அங்கீகாரம் கேட்டால் ஓராண்டு தருகிறார்கள். அதுவும் முடிந்துபோன காலத்திற்கு.. இனியும் நாம் இப்படியே இருந்தால் நம்மை முழுவதுமாக நசுக்கி விடுவார்கள்...

சொத்து வரி கட்டாத பள்ளிகளை தமிழ்நாடு முழுக்க சீனி வைத்தும்

ஜப்தி செய்தும் வருகிறார்கள்..

கொடுமையின் மேல் கொடுமை செய்கிறபோது

 புழுக்கள் கூட நெகிழ்கிறது..

 பள்ளி நிர்வாகிகள் உறங்குகிறார்கள்...

 இப்பொழுதுு இதை தட்டிக் கேட்காவிட்டால் நம்மை நாள்தோறும் நசுக்குவார்கள்...

அரசுப் பள்ளிகளுக்கு எல்லாம் இலவசமாகா தந்தும் பல்வேறு சலுகைகள் 7.5 %10.5%69% இட ஒதுக்கீடு தந்தும் தனியார் பள்ளிகளை ஒழிப்பதே குறிக்கோளாகக் கொண்டு நாளும் செயல்பட்டு வருவதை நல்ல பள்ளி நிர்வாகிகள் நீங்கள் உணரவில்லை என்றால் நம்மை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது...

 நமக்குரிய நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயிக்க மறுக்கிறார்கள்...

கொடுக்க வேண்டிய ஆர். டி. இ கல்வி கட்டணத்தை குறைத்துக் கொடுக்கிறார்கள்..

 உயர் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த மறுக்கிறார்கள்..

 அங்கீகாரம் பெற்று 10- ஆண்டுகளான  பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற அரசாணையை  நிறைவேற்ற மறுக்கிறார்கள். 

 பள்ளிக்கல்வித்துறை புள்ளி விவரத் துறையாக மாறி நாள்தோறும் புள்ளிவிவரங்களை தருவதற்கே பள்ளி நிர்வாகிகள் பாதியாகி போய் உள்ளோம்.

 அடுத்து தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை

நிர்ணயிக்க  சட்டமன்றத்தில் இன்றைக்கு பேசிவிட்டார்கள்..

 சமச்சீர் கல்வித் திட்டமும் கல்வி கட்டண நிர்ணயக் குழுவையும் கொண்டுவந்தவர்கள் ஆசிரியருக்கான  சம்பளத்தையும் நிர்ணயித்து விட்டால் நாம் என்ன செய்யப்போகிறோம்.

 இன்னும் எத்தனை காலம் நீங்கள் மௌனமாக இருக்க போகிறீர்கள் என்று தெரியாமல் கடைசி வாய்ப்பாக

 பள்ளி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் வருகின்ற 26.03.2022 தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நமது ஒற்றுமையை காட்டுவதன் மூலம் அரசின் கவனத்தை ஈர்த்து நமது கோரிக்கைக்கு

செவிமடுக்க செய்யலாம் அல்லது இனி எதிர்காலத்தில் நமக்கு எதிரான எந்த செயலும் அரசு செய்யாமல் சட்டமும் திட்டமும் போடாமல் தடுக்கலாம்...

 நாம் அனைவரும் ஒன்றுபட்டு விட்டோம் என்பதை அரசுக்கு பறை சாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது.

எனவே சங்கங்களின் பேராலும் பெரிய பள்ளிகள் சிறிய பள்ளிகள் என்கிற பேதமெல்லாம் மறந்து விட்டு ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும் உங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களை சனிக்கிழமை  அழைத்து வரவேண்டும்.

 குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி நிர்வாகிகள் கட்டாயம் வரவேண்டும்.

 இந்த அரிய வாய்ப்பை பள்ளி நிர்வாகிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

 யாரோ உழைப்பார்கள் பலனை மட்டும் அனுபவிக்கும் பள்ளி நிர்வாகிகள் இனியும் அப்படி  செய்யக்கூடாது என்று வேண்டுகிறோம்..

 இரண்டு மணி நேரம் செலவழித்து ஒன்றாகக்கூடி நல்ல முடிவு எடுத்து ஒற்றுமையை காட்டினால் வென்று காட்டலாம்..

 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு

 தனிமரம் தோப்பாகாது

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்ற நம்பிக்கையோடு 26.03.2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்திற்கு  வாருங்கள்.. என்று இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்..

 அன்புடன் உங்கள்

 கே ஆர் நந்தகுமார் மாநில செயலாளர்.

23.03.2022.

Cell.9443964053.