இபிஎஸ் ஓபிஎஸ் பதவி விலக வேண்டும் என கிருஷ்ணகிரியில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

இபிஎஸ் ஓபிஎஸ்  பதவி விலக வேண்டும் என கிருஷ்ணகிரியில் ஒட்டிய  போஸ்டரால்  பரபரப்பு...!

அதிமுகவின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று. இபிஎஸ் ஓபிஎஸ்  பதவி விலக வேண்டும்என காவிரி பட்டிணம் ஒன்றிய அதிமுக பிரமுகர் ஒட்டிய  போஸ்டரால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றின் தொடர் தோல்விக்கு காரணமான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று தங்களது ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தைச் சார்ந்தஅதிமுக பிரமுகர் வெற்றிவேல் என்பவர் போஸ்டர் அடித்து கிருஷ்ணகிரி நகரின் முக்கிய பகுதிகளான புதிய பஸ் நிலையம் லண்டன் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம். ராயக்கோட்டை சாலை பகுதிஉள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் போஸ்டர் ஒட்டி உள்ளதால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் அதிமுகவின் ஒருகோடி தொடர்களில் 50 லட்சம் தொண்டர்கள் வேறு கட்சிக்கு போய்விட்டதாகவும் மேலும் 50 லட்சம் தொண்டர்கள் நடுநிலை வகிப்பதாகும் எனவே வருங்காலத்தில் அதிமுக கட்சியை இல்லாமல் போக இபிஎஸ் ஓபிஎஸ் காரணமாகி விடுவார்கள் எனவும் அந்த போஸ்டரில் தகவல் தெரிவித்துள்ளார் எனவே தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி 

சசிகலாவிற்கு அதிமுககட்சி தலைமையை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் எனவும் அந்த போஸ்டரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ள வரும் துணை ஒருங்கிணைப்பாளருமானவேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்.கேபி முனுசாமியின் சொந்த ஊரான காவிரி பட்டணத்திலே அதிமுக பிரமுகர் வெற்றிவேல் போஸ்டர் அடித்துஇருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா விற்கு ஆதரவு தெரிவித்து. அவரிடம் தலைமையை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ள இந்த போஸ்டரால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி