சிறிய பத்திரிக்கை பெரிய பத்திரிக்கை என்கிற பேதம் வேண்டாம்....! அனைவரையும் சரி சமமாக நடத்த வேண்டும்.…!!

சிறிய பத்திரிக்கை பெரிய பத்திரிக்கை என்கிற பேதம் வேண்டாம்....! அனைவரையும் சரி சமமாக நடத்த வேண்டும்.…!!

இன்று சின்ன பத்திரிக்கையாக இருக்கும் நாங்கள் தான் நாளைக்கு பெரிய பத்திரிக்கையாக மாறுவோம்  அப்போதுஎல்லோரும் பார்க்கதானே போறீங்க - சிறு - குறு- பத்திரிக்கை வெளியீட்டாளர்கள் - ஆசிரியர்கள்-  நிருபர்களின்குரல்-தமிழக அரசும் - தமிழக செய்தி துறை அமைச்சரும்-நடவடிக்கை எடுப்பார்களா?🙏🙏

அய்யா நாங்களும் முறையா பதிவு பெற்று மத்திய அரசிடம் ( RNI ) பதிவு வாங்கி பத்திரிக்கை வெளியிடும் நிறுவனத்திடம் முறையான அடையாள அட்டை பெற்றுதானே செய்தி சேகரிக்கவும், விளம்பரம் சேகரிக்கவும் வருகின்றோம் பின்பு ஏன் எங்களை சிறிய பத்திரிக்கை நீ இங்கு எல்லாம் செய்தி சேகரிக்க வரகூடாது போலி பத்திரிக்கை நிருபர் என்று பிடித்து கொடுத்து விடுவோம் என்று பிரபல பெரிய பத்திரிக்கைகள் மற்றும் மீடியா சேனல் நிருபர்கள் எங்களை வெளியேற்றுகின்றனர்.

இவர்களை எல்லாம் கடந்து நாங்கள் அடித்து பிடித்து செய்தி சேகரித்து அதனை பதிவிட்டு செய்தித்தாளை கொண்டு சென்றால் இது எல்லாம் சிறிய பத்திரிக்கை வார இதழ், இருவார இதழ், மாத இதழ், எத்தனை பிரதிகள் வெளிவருகின்றது தலைமை செயலகத்தின் செய்தித்துறையில் பதிவு உள்ளதா இப்படி கேள்விகள் கேட்டு பி.ஆர்.ஓ-க்கள் ஒரு பக்கம் வெளியேற்றுகின்றனர்..

அதனையும் மீறி செய்திகள் சேகரித்து மக்களிடம் கொண்டு சேர்க்கின்றோம். பின்பு எதாவது அரசாங்க சலுகைகள் பேரிடர் காலத்தில் அரசு அறிவித்தால் அதிலும் அரசு அங்கிகாரம் பெற்ற செய்தியாளர்களுக்கு மட்டுமே என்று அறிவிப்பு. மத்திய அரசிடம் RNI பதிவு பெற்ற நிறுவனத்தில் முறையான அடையாள அட்டை பெற்று பணி புரியும் தாலுகா செய்தியாளர்களான எங்களை சிறிய பத்திரிக்கை என்று பாகுபாடு பார்த்து புறம் தள்ளினால் எங்களுக்கு எப்படி அந்த சலுகைகள் கிடைக்கும். அப்படி அரசு அங்கிகாரம் பெற்ற செய்தியாளர்கள் என்றால் மாவட்டத்திற்கு பத்து, பதினைந்து நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள அனைவரும் போலி நிருபர்களா?

பெரிய பத்திரிக்கைகள் மற்றும் மீடியா சேனல்களில் பணி புரியும் நிருபர்களே உங்களை போல் எங்களுக்கு நிரந்தர ஊதியம், அரசாங்க சலுகைகள் கிடையாது. விளம்பரம், செய்திகள் குறிப்பிட்ட அளவு சேகரித்தால் மட்டுமே ஊதியம் கிடைக்கும் அப்படி இருந்தும் சமுதாய அக்கறை கொண்டு நாங்களும் பணியாற்றி வருகின்றோம். 

உண்மைதான் நிறைய பத்திரிக்கைகள் தற்போது RNI பதிவு பெற்று வெளிவந்துகொண்டு இருக்கின்றது அதில் சிலவற்றை உங்களை போன்ற பெரிய முன்னனி பத்திரிக்கை நிருபர்கள் கேள்விப்பட்டிருக்க வாய்பில்லைதான் என்றாலும் ஒன்றை மட்டும் மனதில் வைத்துகொள்ளுங்கள் இன்று நீங்கள் பணி புரியும் முன்னனி பத்திரிக்கை நிறுவனம் சில வருடத்திற்கு முன்பு எங்களை போல் கேள்விபடாத பத்திரிக்கை இடத்தில் இருந்தவைகள்தான்.

அதுபோல் பி.ஆர்.ஓ-க்கள் அனைவரும் மனதில் வைத்துகொள்ளுங்கள் நாங்கள் சிறிய பத்திரிக்கைகள்தான் பெரிய பத்திரிக்கை போன்று பத்து,பதினைந்து பக்கம் எல்லாம் இல்லை, ஐம்பதாயிரம்,லட்சம் பதிப்புகள் எல்லாம் இல்லைதான், ஆனாலும் முறையாக மத்திய அரசிடம் பதிவு பெற்றே நாங்களும் பத்திரிக்கை இதழை வெளியிடுகின்றோம் அதிலும் நான்கு பக்கம் அச்சிட்டு வெளியிட நாங்கள் படும் பாட்டினை யாரிடம் முறையிடுவோம் அப்படி கஷ்டப்பட்டு வெளிகொண்டு தங்களிடம் வந்து செய்தித்தாளை கொடுத்தால் நீங்கள் அதனை கையில் கூட வாங்காமல் இதுபோன்ற பெயர் தெரியாத பத்திரிக்கை எல்லாம் ஏன் வருகிறீர்கள் என்றும் மாநில அரசின் பதிவை கேட்கிறீர்கள். அய்யா மாநில அரசு பதிவு வேண்டும் என்றால் பின்பு ஏன் RNI என்று ஒன்று உள்ளது நமது மாநில அரசே புதிய செய்தி நிறுவனம் பதிவை பெற வலைதளம் உருவாக்கலாமே.?

இருந்தும் பத்திரிக்கைத்துறையை வெறுக்காமல் நாங்கள் இதெல்லாம் கடந்து செய்தி சேகரிக்க செல்லும்போது காவல்துறையினர் ஒருபக்கம் பிடித்து எந்த பத்திரிக்கை இது நாங்கள் கேள்விபட்டதே இல்லையே நீங்கள் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்ட கூடாது பி.ஆர்.ஓ அலுவலகத்தில் அரசு ஸ்டிக்கர் கொடுப்பார்கள் அதனை ஒட்டவேண்டும் என்று அவர்களும் எங்களை வெளியேற்றுவர்.. அவர்களுக்கு என்ன தெரியும் பி.ஆர்.ஓ அலுவலகத்தில் எங்களுக்கு கிடைத்த ராஜ மரியாதை பற்றி.. 

அடுத்ததாக விளம்பரமாவது சேகரித்து ஊதியம் வாங்கலாம் என்று கடை,கடையாக சென்று விளம்பரம் கேட்டால் அவர்களும் இது என்ன புதிய பத்திரிக்கை பேரே கேள்விபடவில்லையே வெளிவருகிறதா என்று பிறகு பார்போம் கூறி வெளியேற்றுவர்..

சாதாரன பெட்டி கடையில் எங்களது பத்திரிக்கையை வைத்தால் கூட ஏதோ ஒரு மூளையில் ஒரு நாள் மட்டும் வைத்துவிட்டு தூக்கி போடுகின்றனர்.. 

இப்படி எங்கு சென்றாலும் எங்களை அவமதித்து சின்ன பத்திரிக்கை, நாலுபக்கம், கலர் இல்லை, கேள்விபடலை அப்படி இப்படின்னு கூறி வெளியேற்றியும் நாங்கள் இருப்பதை வைத்து போராடி தலையை அடமானம் வைத்து பல இன்னல்களின் நடுவே செய்திகளை சேகரித்து பதிவிட்டு செய்தித்தாள்களை வெளியிடுவது லட்சம் லட்சமாக சம்பாதிக்க அல்ல,  அனைத்து முன்னனி செய்தித்தாள்களிலும் பிரேகிங் நியூஸ் என்று ஒரே மாதிரியான தலைப்புடன் அனைத்திலும் ஒரே செய்தி வெளிவரும்போது அதற்கு பின்னால் எங்கோ நடக்கும் சில மறைக்கப்படும் செய்திகளை நாங்கள் சேகரித்து பதிவிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கவே பத்திரிக்கை வெளியிடுகின்றோம்.. தினசரி நாளிதழ்களுக்கும் வார,இருவார,மாத இதழ்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.. நாளிதழில் இன்று சிறியதாக வெளிவரும் எங்கோ ஓர் ஓரம் கட்டம் கட்டப்படும் செய்தியினை விரிவாக மக்களுக்கு நடத்தவற்றை முழுவதும் புரியும்படி பதிவிட்டு வெளியிடுவோம் இவ்வளவுதான் வித்தியாசம்.. 

சிறிய பத்திரிக்கை, கேள்வி படாத பத்திரிக்கை,  நீங்கள் எல்லாம் பத்திரிக்கை என்று கூறிக்கொண்டு வெளியே சுற்றகூடாது என்று எங்களை அனைத்து துறையினரும் மட்டம் தட்டினால் எப்படி அய்யா நாங்களும் பெரிய பத்திரிக்கை ஆவது?  விடுங்கள் சுதந்திரமாக செய்தி சேகரிக்க விடுங்கள் சிறியது பெரியது என்ற பாகுபாடினை உடைத்து எரியுங்கள், அப்படியும் காவல்துறையினர்களுக்கு சந்தேகம் எனில் அடையாள அட்டையை வாங்கி சம்மந்தபட்ட நிறுவனத்திடம் தொடர்புகொண்டு கேளுங்கள் இவர் நிருபர்தானா என்று, இல்லையேல் அடையாள அட்டையில் உள்ள பதிவு என்னை சோதித்து பாருங்கள் அப்படி உண்மை என்றால் விடுங்கள் நாங்களும் செய்தி சேகரிக்க பயனிப்போம் தவறு இருக்கும்பட்சத்தில் அந்த நிருபர்மீது நடவடிக்கை எடுங்கள்.. பிரஸ் என்ற ஸ்டிக்கருடன் வலம் வரும் வாகனத்தை சோதிக்கும்போது முறையான பதிவுடன் அடையாள அட்டை உள்ளது என்றால் விட்டு விடுங்கள், இல்லை நான் நிருபர் இல்லை இந்த வாகனம் என்னுடைய அண்ணனுடையது ,நண்பருடையது,தந்தையுடையது என்று கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், அடையாள அட்டை இல்லை என்பவர் மீது நடவடிக்கை எடுங்கள்..

சரி போகட்டும் இது போன்று எங்களை சிறிய பத்திரிக்கை, வெளிவராத பத்திரிக்கை, என்று கூறும் அனைவருக்கும் அனைத்து துறையினருக்கும் ஓர் கோரிக்கை - முதலில் எங்களை செயல்படவிடுங்கள் பின்பு நாங்கள் வழங்கும் செய்தித்தாளை வாங்கி ஒரு நிமிடமாவது படியுங்கள் அப்படி பார்த்தால் மட்டுமே இப்படி ஒரு தலைப்பில் பத்திரிக்கை வெளிவருகின்றது என்று தெரியவரும், அதனை விட்டுவிட்டு உள்ளேயே சேர்க்காமல் செய்தித்தாளை கண்களில் பாராமல் நிறுவனம் நிருபர்களான எங்களை நியமித்த பி.ஆர்.ஓ கடிதத்தை வாங்காமல் இருந்தால் எப்படி அய்யா இப்படி ஓர் பத்திரிக்கையும் அதில் நாங்கள் பணி புரிவதும் உங்களுக்கு தெரியும்.. 

காவல்துறையினரும் தயவுசெய்து வாகன சோதனையில் பிடிபடும் பத்திரிக்கையாளர்களை சோதித்து பார்த்து முறையான அடையாள அட்டை இருந்தால் அது எந்த தலைப்பில் இருந்தாலும் சரி அந்த பத்திரிக்கை முறையாக பதிவு பெற்றுள்ளதா என்பதை மட்டும் அறிந்து அந்த நிருபரை பணி செய்ய விடுங்கள், கேள்விபடாத பத்திரிக்கை என்று கூறி நீங்களும் சிறிய பத்திரிக்கைகளின் வளர்ச்சிக்கு தடைபோடாதீர்கள்..காரணம் நிச்சயம் அந்த பத்திரிக்கை தாங்கள் பணி புரியும் காவல்நிலையத்திற்கு நிருபர்கள் மூலமாக வழங்கப்பட்டிருக்கும் ஆனால் தங்களது பார்வைக்கு அந்த செய்தித்தாள் வராமல் போயிருக்கலாம் எனவே முறையான பதிவு இருப்பின் அந்த நிருபர்களை பணி செய்ய விடுங்கள்..

சென்ற ஆட்சியிலும் சரி தற்போதுள்ள ஆட்சியும் சரி தாலுகா வாரியாக பணிபுரியும் நிருபர்களையும், வார இதழ், இருவார இதழ், மாத இதழ் நிருபர்களை கண்டுகொள்வதே இல்லை இருப்பினும் எங்கள் பணியினை நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்றோம் அதனை சரியாக செய்து நாங்களும் பெரிய பத்திரிக்கையாக மாறுவோம் அதற்கு வழி விட்டால் போதும் இதுவே இன்று சிறிய பத்திரிக்கையாக உள்ள எங்களது வேண்டுகோள்.. 

முன்னனி பத்திரிக்கை மற்றும் ஊடக நிருபர்களும் எங்களை சிறிய பத்திரிக்கை என்று அவமதிக்காமல் எங்களது பணியினை செய்ய வழி விடுங்கள் போதும்..பத்திரிக்கை அடையாள அட்டையை பயன்படுத்தி எவரேனும் தவறு செய்தால் அவரை தட்டிக்கேளுங்கள் அனைவரையும் தடுத்தால் இத்துறையில் சாதிக்க துடிக்கும் நிருபர்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதை உணருங்கள் போதும்..

சிறிய பத்திரிக்கை என்று சொல்லப்படும் எங்களை போன்ற ஆசிரியர்கள், நிருபர்கள் யாரும் தனக்கு பட்டா வேணும், வீடு வாசல் வேணும்,பணம் பெயர் புகழ் வேணும் என்று ஆசை படவில்லை.. 

*சின்ன சின்ன ஆசைகள் :-*

1.) அந்தந்த மாவட்ட பி.ஆர்.ஓ அலுவலகத்தில் எங்களது நிறுவனம் வழங்கும் பி.ஆர்.ஓ கடிதத்தை பெற்று பி.ஆர்.ஓ அலுவலக Whatsapp Group,  Email ல் தனது நம்பர் இனைத்து மாவட்ட ஆட்சியர் செய்திகள் கிடைக்க வழிவகையும்.

2.) பி.ஆர்.ஓ. விடம் சென்றால் தகுந்த மரியாதையும்.

3.) தீபாவளி போன்ற விழா காலங்களில் ஏதேனும் அரசு வழங்கும் பரிசுகள்.( Gift Box )

4.) எப்பொழுதாவது அரசு அறிவிக்கும் சலுகைகள் ( Eligible என்றால் ) 

5.) வாகன பாஸ்.. ( அரசு Press Sticker )

6.) தகுதிக்கு ஏற்ப Accreditation Card ( பாகுபாடின்றி )

7.) எல்லாவற்றிற்கும் மேலாக பத்திரிக்கையாளனின் பாதுகாப்பு.. 

*இதைமட்டும் தானே நாங்கள் கேட்கின்றோம்..* 

பி.ஆர்.ஓ அலுவலக Successful Story,  ஆட்சியர் செய்திகள் இதை பதிவிட்டு பிரதிகள் வழங்கும்போது நாங்கள் வேண்டும்..பின்பு அடிப்படை சலுகைகள் கேட்டால் சிறிய பத்திரிக்கைகளா?  

இதுபோன்று அனைத்து மாவட்டத்திலும் சம்மந்தபட்ட பி.ஆர்.ஒ க்கள் பெரிய பத்திரிக்கை சிறிய பத்திரிக்கை என்று பாகுபாடு பார்க்காமல் அனைவரும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் குடும்பம் குழந்தைகள், வலிகள் வேதனைகள் கணவுகள் உள்ளது என்பதை புரிந்துகொண்டு சலுகைகளையும் பத்திரிக்கையாளர்கள் என்ற மரியாதையையும் வழங்கி,வாகன Press Sticker, மேலும் அந்தந்த மாவட்ட பி.ஆர்.ஒ அலுவலக வாட்ஸப் குழுவில் தகுந்த பத்திரிக்கை நிறுவனத்தின் நிருபர் நம்பரை இனைத்து செய்திகள் கிடைக்க வழிவகை செய்தால் போதுமானது. இதனையும் மீறி திரும்ப திரும்ப எங்களை சிறிய பத்திரிகை வார இதழ்-மாதமிருமுறை இதழ்-மாத இதழ் என பிரித்தாளும் சூழ்ச்சிகளை தொடர்ந்து அந்தந்த மாவட்ட PRO வும்- அவருக்கு ஜால்ரா தூக்கி - ப(பி)ணம் பார்த்து சலுகைகளை அனுபவித்து வரும் பெரிய பத்திரிக்கையாளர்- ஊடகவியலாளர் என்று சொல்லி  வியாபாரம் செய்துதிரியும் நபர்களை பற்றியும் அந்தந்த மாவட்டத்தில் எங்களின் சிறு சிறு (நீங்கள் கூறுவது போல்) பத்திரிகைகளில் உங்களின் கவர் வாங்கி பிழைப்பு நடத்தும் காலாசாரத்தை ஆதாரத்துடன் வெளியிடுவோம் என இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.இனிமேலாவது உங்களது இந்த பிரித்தாளும் விரோத  போக்கை கைவிட்டு விட்டு நாம் அணைவரும் ஒரு இனம் என நினைத்து எங்களுடன் கைகோருங்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூணை வலுப்படுத்த நாம் ஒற்றுமையுடன் செயல்பட இன்றிலிருந்து முடிவெடுப்போம். இல்லை நாங்கள்தான் பெரியவர்கள் - உங்களை போன்ற சிறு - குறு பத்திரிகைகளை காட்டிக் கொடுத்து எட்டப்பன் வேலை செய்வதை நிறுத்த மாட்டோம் என்று உங்கள் செயலை தொடர்ந்தால் இனி மாதம் மாதம் எங்கள் இதழ்களில் உங்களைப் பற்றிதான் செய்தி வரும் என தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

என்றும் இந்த பத்திரிகை உலகை நம்பி வாழும் சிறு - குறு- பத்திரிகையாளர்கள் - ஆசிரியர்கள்-வெளியிட்டாளர்கள் - சார்பாக 

முனைவர். S.N.மோகன்ராம் - வல்லூறு மாத இதழ்-பொறுப்பாசிரியர்-9952875881