மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை சைலண்டாக செயல்படுத்தும் தமிழக அரசு...?!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை சைலண்டாக செயல்படுத்தும் தமிழக அரசு...?!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைய தொடங்கிய நிலையில் கடந்த 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பள்ளிகளில் பரிமாற்ற திட்டத்தை 25ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட தொடங்கின. ஆனால் தென்னாப்பிரிக்கா வில் உருவான ஓமைக்ரான் தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியதால் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஜனவரி 31ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது

இதையடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைய தொடங்கியதால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மீண்டும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ‘பள்ளி பரிமாற்ற திட்டம்’ தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் வேறு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள இயற்கை மற்றும் கல்வி சூழல்களை அறிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னதாக இந்த திட்டம் நேரடி முறையில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த திட்டம் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வேறு பள்ளிகளில் உள்ள முக்கிய இடங்களை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும். மேலும் தற்போது பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் பள்ளி பரிமாற்ற திட்டத்தை ஆன்லைன் முறையில் வருகிற 25ம் தேதிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு இருக்கிறதா? தெரிகிறதாா? என்பதை சோதிப்பதற்காக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது ..

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வரும் இந்த அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் முக்கியமான அங்கங்கள். இவற்றை அச்சு பிசகாமல் பெயரை மட்டும் மாற்றி தமிழக அரசு அப்படியே செயல்படுத்தி வருகிறது. 

ஆனால் வெளியில் செல்வது என்னவோ ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எங்கள் கொள்கை வேறு அவர்கள் கொள்கை வேறு என்று வெளி வேஷம் போடுவது வெட்கக்கேடாக இருக்கிறது.

தமிழக அரசு இனியாவது தனது நிலையை மாற்றிக் கொள்ளுமா...? அல்லது பொய் பித்தலாட்ட புரட்டு சொல்லியே நாட்களை நகர்த்துமா.,? என்பது பொதுமக்களின் கேள்வி.