அதிநவீன தொழில் நுட்பத்தில் ஸ்ரீ சாம்ராஜ் ஹெல்த் சர்வீஸ் ( பி) லிமிடெட் பரிசோதனை மையம்

 அதிநவீன தொழில் நுட்பத்தில் ஸ்ரீ சாம்ராஜ் ஹெல்த் சர்வீஸ் ( பி)  லிமிடெட் பரிசோதனை மையம்

ராமநாதபுரம் பிப்-17

5வது கிளை  ராமநாதபுரம் சாலைத் தெருவில் துவங்கப்பட்டது.  இந்திய மருத்துவ கழகத்தின் ராமநாதபுரம் கிளைச் செயலாளர் மருத்துவர் பரணி குமார் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சாதனா கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் சேர்மன் C.சமுத்திர விஜயன் உட்பட முக்கிய பிரமுகர்கள் .சாம்ராஜ் லேப்ஸ் மேலாண்மை இயக்குனர் சம்பத்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்க விழாவை சிறப்பித்தனர்.

மேலாண்மை இயக்குனர் சம்பத்குமார் கூறும்போது:-

எங்களது ஸ்ரீ சாம்ராஜ் லிட் நிறுவனத்தின் தலைமையிடம் திண்டிவனத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் துவங்கி தற்போது 5வது கிளையாக ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் துவங்கப்பட்டுள்ளது. எங்களது பரிசோதனை மையத்தில் ரத்தம் முதல் கோவிட் - 19 வரை அனைத்து விதமான பரிசோதனைகளும் அதிநவீன தொழில் நுட்ப்பத்தில் மேற்கொள்ளப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் என்ஏபிஎல் சான்றிதழ் பெற்ற மிகப்பெரிய நவீன வசதி கொண்ட பரிசோதனை மையம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகளுக்கு நேரில் வந்தும் பரிசோதனை. மேற்கொள்ளப்படும் இவ்வாறுகூறினார்.கிளை மேலாளர் நன்றி கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர்  M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு