பள்ளிகள் முழு நேரமும் நடைபெற வேண்டும். பள்ளிக்கல்வித்துறை உத்தரவு....!

பள்ளிகள் முழு நேரமும் நடைபெற வேண்டும். பள்ளிக்கல்வித்துறை உத்தரவு....!

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையில் அனைத்து பள்ளிகளும் காலை, பிற்பகல் என்று முழு நேரமும் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று கடந்த 2 வருடங்களாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தினசரி தொற்று ஜனவரி இரண்டாவது வாரத்தில் உயர்ந்து வந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அதிகரிக்கப்பட்டன. மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் முதலமைச்சர் அண்மையில் அமலில் இருந்த ஊரடங்குகளில் தளர்வு மற்றும் பிப்ரவரி 1 முதல் பள்ளி கல்லுரிகள் திறப்பு என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் பிப்ரவரி 1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் முழுவதும் குறையாத நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில் நடப்பு ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் விரைந்து பாடங்களை முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த வகையில் பள்ளிகள் முழு நேரமும் நடைபெற வேண்டும். இதன் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் முழு நேரமும் பள்ளிகள் இயங்க வேண்டும் மற்றும் மாணவர்களை முழு அளவில் நேரடியாகப் பள்ளிக்கு வர வைத்து பாடம் நடத்த வேண்டும். இந்த வகையில் அரை நாள் மட்டும் பள்ளிகளை நடத்துவது மற்றும் ஒரு சில மணி நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவது ஆகியவை நடைபெற கூடாது. இவ்வாறு நடைபெற்றால் அப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்