மஹாசிவராத்திரியை முன்னிட்டு கலை விழா

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கலை விழா 

ராமநாதபுரம் பிப்-28

ராமநாதபுரம் மாவட்டம்,    ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும்  ஸ்ரீரங்கம் பரத கலா அகாடமி இணைந்து  மஹாசிவராத்திரியை முன்னிட்டு கலை விழா நடைபெறுகிறது!!!

 1.3.22 மாலை 6 மணி முதல் 2.3.22 காலை 6 மணிவரை, திருஉத்தரகோசமங்கையில்  நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் 

என்று முன்னாள் கலையியல் அறிவுரைஞர் கலை பண்பாட்டுத் துறை சென்னை பூர்ண புஷ்கலா கூறினார்.

இது சம்பந்தமாக முன்னாள் கலையியல் அறிவுரைஞர் கலை பண்பாட்டு துறை, தமிழ்நாடு அரசு  தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக திருச்சிராப்பள்ளி மாவட்ட தலைவர், சென்னை, அ.பூர்ண புஷ்கலா நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது:- திருஉத்தரகோசமங்கையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கடந்த 4 வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் 12 குழுக்கள் இடம் பெற்று நடனம் ஆட உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், பரம்பரை அறங்காவலர் R.B.K.இராஜேஸ்வரி நாச்சியார், ராஜா குமரன் சேதுபதி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள், இதில் கர்நாடகம்,ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும்,ஸ்ரீரங்கம், மதுரை ,உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள் கலந்து கொள்வார்கள்.இதில் பரதநாட்டியம் மட்டுமல்லாமல் பிற நடனங்களும் நடைபெறும் என்று அவர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு