அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்குதனியார் பள்ளிகள் கோரிக்கை...!.

 அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்குதனியார் பள்ளிகள் கோரிக்கை...!

தமிழ்நாடு முழுக்க அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகளுக்கு இதுபோன்றுதான் சென்ற ஆண்டைக் காட்டிலும் மிக மிக குறைவான கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இப்படியே நாம் வாய்மூடி மௌனியாக இருந்தால் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம்.

 விண்ணை முட்டும்  விலைவாசிகள்.,. லஞ்சலாவண்யங்கள்  செலவுகள் கூடுமே தவிர குறையாது..

 எந்த அடிப்படையில் நீதி அரசர் மாண்புமிகு பாலசுப்பிரமணியம் அவர்கள் எப்படி தனியார் பள்ளிகளின்  கல்வி கட்டணத்தை பாதியாக குறைத்து பள்ளி நிர்வாகிகளுக்கு நிர்ணயித்து அனுப்புகிறார் என்பது சட்டத்திற்கும் கடவுளுக்குமே  வெளிச்சமாக உள்ளது.

எனவே உடனடியாக அனைத்து பள்ளி நிர்வாகிகளும் சற்று கவனம் செலுத்தி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும்  கலை கல்லூரிகளில் பொறியியல் கல்லூரிகள் பி.எட் கல்லூரிகள் பாலிடெக்னிக்குகள் இன்னபிற கல்வி நிறுவனங்கள் ஒரே மாதிரியான கல்வி கட்டணம் நிர்ணயிக்க அரசு ஆணையிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது..

 அதே போல் தமிழ்நாடு முழுக்க அனைத்து பள்ளிகளுக்கும் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒரே மாதிரியான நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயிக்க கோரி நாம் முதற்கண் மக்கள் மன்றத்தில் போராடவேண்டும்..

 பின்னர் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். ஏற்கனவே இதற்காக நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் உயர்நீதிமன்றம் தொட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி பல்வேறு தீர்ப்புகள் பெற்று அதன் அடிப்படையில்தான் அதிகமான கட்டணம் வசூலிக்க கூடிய பள்ளிகள் சீல்  வைக்கப்படாமல் அங்கீகாரம் ரத்து செய்யப்படாமல் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்படாமல் பள்ளி கோப்புகள் உயரதிகாரிகள்  எடுத்துக்கொண்டு செல்ல அனுமதிக்காமல் தேவையான கல்வி கட்டணம் பெறுவதற்காக  மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை பெற்று.... தற்போது அந்த வாய்ப்பிலும் தற்போதுள்ள நீதியரசர் பாலசுப்பிரமணியம் அவர்கள் மிக மிக குறைந்த கட்டணத்தை மனிதாபிமானம் இல்லாமல் மனசாட்சி இல்லாமல் பள்ளி நிர்வாகிகள் கொடுக்கும் ஆவணங்களை பரிசோதித்தும் பார்க்காமல் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் குறைந்தபட்ச கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பது   எக்காலத்திலும் நமது மாநில சங்கம் ஏற்றுக் கொள்ளாது..

 அதற்காக பலமுறை அவரிடம் நேரில் சென்று முறையிட்டும் எந்த பயனுமில்லை.அவரிடமே மீண்டும் மேல்முறையீடு செய்தும் எந்த பயனும் இல்லை.

உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகிகள் தயாராக இல்லை.. போராட முன் வர மாட்டீர்கள் சங்கத்திலும் சேர மாட்டீர்கள்... நீங்கள் சங்கத்தை ஏமாற்றினால் உங்கள் பள்ளி பெற்றோர்களும் அரசும் உங்களை ஏமாற்றுவார்கள்..

 நாங்கள் என்ன செய்ய முடியும். எனவே முதற்கண் இது குறித்து தமிழக முதல்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்துவிட்டு மக்கள் மன்றத்தில் 10,000 போஸ்டர்கள் மாவட்டம் தோறும் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஒரே மாதிரியான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கோரி சுவரொட்டி  ஒட்டி அரசின் கவனத்தை ஈர்க்கவும்... அரசு எடுக்கக்கூடிய முடிவை பொறுத்து நாம் அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என்று நமது மாநில தலைமைச் செயற்குழு முடிவு எடுத்திருக்கிறது..

 பள்ளி நிர்வாகிகள் தங்கள் மேலான கருத்துக்களை தெரிவித்திட வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றேன்.

 இனியும் ஏமாந்தால் இருப்பதை இழந்து விடுவோம். கவனமாக இருக்க பள்ளி நிர்வாகிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்....

 அன்புடன் உங்கள்

கே. ஆர்.நந்தகுமார் மாநில செயலாளர்.

23.02.2022