நடக்காத திருவிழாவிற்கு எதற்கு விடுமுறை.....? தருமபுரி மாவட்ட ஆட்சியர் சிந்திப்பாரா...?!

 நடக்காத திருவிழாவிற்கு எதற்கு விடுமுறை.....? தருமபுரி மாவட்ட ஆட்சியர் சிந்திப்பாரா...?!

தமிழகத்தில் இப்போது எல்லாமே தலைகீழாக தான் நடக்கிறது. பள்ளிக்கல்வித்துறை தான் இப்படி பாழாய் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்தால் இல்லை இல்லை ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகமே அப்படித்தான் இருக்கிறது என்பதற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஒரு உதாரணமாகத் திகழ்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை எப்படி நடத்தாத ஒரு அரையாண்டு தேர்வுக்கு விடுமுறை விட்டதோ....! அதேபோன்று நடக்காத ஒரு ஊர் திருவிழாவிற்கு  விடுமுறை விட்டுள்ளது தர்மபுரி மாவட்ட நிர்வாகம்.

வருடம் தோறும் பிப்ரவரி மாதத்தில் பாலக்கோட்டில் அமைந்துள்ள புதூர் மாரியம்மன் திருக்கோவில் திருவிழா நடப்பது வழக்கம் அதற்காக அந்த நாளில் மட்டும் பாலக்கோடு வட்டத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. 

அப்போது இதை நாம்  மக்கள் ஆட்சியின் சார்பாக கண்டனத்தை தெரிவித்தோம்.  ஒரு பகுதியில் நடக்கின்ற விழாவிற்கு ஒட்டுமொத்த வட்டத்திற்கும் ஏன் விடுமுறை விடுகிறீர்கள் அந்த பகுதியில் மட்டும் விடுமுறை விட்டால் போதாதா என்கிற கேள்வி எழுப்பினோம். அரசு அதிகாரிகள் இதை இன்று வரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

இப்போது இதைவிட பெரிய கூத்து என்னவென்று சொன்னாள் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதால் இந்த திருவிழாவிற்கு மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதனால் இந்த ஆண்டு பாலக்கோட்டில் உள்ள புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடத்தப்படவில்லை.

சாமியை விரும்புகின்ற பொதுமக்கள்  குடும்பம் குடும்பமாக சென்று தரிசித்து வருகிறார்கள் இதில் பெரிய ஆர்பாட்டம் அலங்காரம் எதுவும் இல்லை கூட்டமும் இல்லை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. 

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்த வட்டத்திற்கும் விடுமுறை விட்டு இருப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

இது எப்படி இருக்கிறது என்று கேட்டால் Ee அடித்தான்  காப்பி போல் தான் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே போட்ட ஆணையை புதுப்பித்து போடுவதற்கு ஒரு ஐ.ஏ.எஸ். தேவையா...? சமயோஜிதம் கொஞ்சம்கூட வேண்டாமா...?  என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் இனியாவது சிந்தித்து செயல்பட வேண்டும்.