ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி இன்று காலை திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி இன்று காலை திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் ஜன-01

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி இன்று காலை திறக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அறிவித்த நிலையில், ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, செய்யதம்மாள் மெட்ரிக் மேநிலைப்பள்ளி, நேஷனல் அகாடமி பள்ளி ஆகியவை இன்று திறக்கப்பட்டது. இங்கு பயிலும் மாணவ மாணவிகள் சிரித்த முகத்தோடு பள்ளிக்கு வந்தனர்.மாணவ மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து  பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் உள்ளே அனுமதித்தனர். இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் மருத்துவர் பாபு அப்துல்லா, தலைமையாசிரியர் ஹாஜா முஹைதீன்,உதவி தலைமை ஆசிரியர் ஜாகீர் உசேன்,மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாணவ மாணவிகளை வரவேற்றனர். இதனை அடுத்து செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு