குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்் கிடைக்குமா...? கிடைக்காதா...??

 குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்் கிடைக்குமா...? கிடைக்காதா...??


தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்று நம்ப முடியாது. ஏன் என்று சொன்னால் திராவிட முன்னேற்ற கழகம் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நகை கடன், கல்விக் கடன் ரத்து என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து வெற்றி பெற்றது.  ஆனால்  இந்த நாடாளுமன்றம் தற்போது முடிவுறும் தருவாயில் உள்ள நிலையிலும் அந்த கோரிக்கைகள் அனைத்தும் கிடப்பிலேயே கிடக்கிறது. அதனால் இந்த திட்டம் இப்போதைக்கு வருமா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது முதல்வர் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தார். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தபடி இலவச பேருந்து பயண திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றினார். ஆனால் இதுவரை குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இது குறித்து பல்வேறு தரப்பினரும் அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக தலைமையிலான அரசு குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் வழங்காததை சுட்டி காட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

 இந்த நிலையில் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் பல்வேறு பகுதிகளில் போலியாக தயார் செய்து வழங்கப்பட்டது. இதை பார்த்த பல எதிர்க்கட்சியினர் திமுகவின் தில்லுமுல்லு பிரச்சாரத்தில் இதுவும் ஒன்று என்று கூறினார்கள்.

தற்போது நகர்ப்புற தேர்தல் முடிவடைந்த நிலையில் வெற்றியின் பரிசாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்..?!