பிரதமர் மோடியை கொலை செய்ய காங்கிரஸ் திட்டம்...?! பஞ்சாபில் நடந்தது என்ன...?

பிரதமர் மோடியை கொலை செய்ய காங்கிரஸ் திட்டம்...?! பஞ்சாபில் நடந்தது என்ன...?


கடந்த சில மாதங்களாகவே ஒரு அறிவிக்கபடாத இறுக்கத்தை மோடியின் பாதுகாப்பு விஷயங்களில் காண முடிந்தது, பல பாதுகாப்பு வியூகங்கள் மாற்றபட்டன‌

அவரின் கார் முதல் பல விஷயங்கள் அவசரமாக பாதுகாப்பாக மேம்படுத்தபட்டன, ஹெலிகாப்டர் பயணங்கள் மிக மிக கடுமையாக்கபட்டன இன்னும் பலத்த முன்னெச்செரிக்கை மேற்கொள்ளபட்டதுஅதற்கான விடை இன்று தெரிந்தது

இது சாதாரணமாக கடந்து செல்லும் விஷயம் அல்ல, பஞ்சாபியரின் மிக பெரும் கோரிக்கையான விவசாய சட்டங்களை திரும்ப பெற்றாகிவிட்டது, மேற்கொண்டு பல சலுகைகள் வழங்கபட்டன இந்த திடீர் போராட்டத்துக்கு அவசியமே இல்லை

இன்னும் எஸ் 400 போன்ற சாதனங்கள் அவர்கள் காலடியில்தான் நிறுவபட்டுள்ளன, பாகிஸ்தான் தாக்கினால் முழு பாதுகாப்பை வழங்க அங்குதான் அதிமுக்கிய பாதுகாப்பு சாதனங்களை நிறுவியிருக்கின்றது அரசு

இப்பொழுதும் சுமார் 42 ஆயிரம் கோடி நலதிட்டங்களை அறிவிக்கத்தான் மோடி சென்றார் அங்குதான் இந்த விபரீதம் நடந்திருக்கின்றது, தெய்வாதீனமாக பெரும் அசம்பாவிதம் தடுக்கபட்டிருகின்றது

இவர்கள் யார்? என்ன காரணத்துக்கு கூடினார்கள்? இவர்கள் தலைவன் யார்? என்ன கோரிக்கைக்காக மோடி வருகையினை எதிர்த்தார்கள் என்பது தெரியவில்லை

விழா நடக்கும் இடத்துக்கு முதலில் ஹெலிகாப்டரில் மோடி செல்லும் திட்டமே இருந்திருக்கின்றது, ஆக எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தாலும் விழா நடக்கும் இடத்துக்குத்தான் கும்பல்வந்திருக்க வேண்டும்

ஆனால் ஹெலிகாப்டர் இயக்க சரியான காலநிலை இல்லா நிலையில் அவசர தரைமார்க்கம் வழி செல்ல அனுமதி பஞ்சாபிய பொலிசிடம் கோரபட்டடுள்ளது அதில் இருந்துதான் சிக்கல் தொடங்க்குல்கின்றது

அவர் காரில் வருகின்றார் அதுவும் இந்த வழியில்தான் வருகின்றார் என அக்கூட்டம் மின்னல் வேகத்தில் தெரிந்து மறிக்க வந்ததெல்லாம் எளிதில் கடக்கும் விஷயம் அல்ல‌

மோடிக்கு பாதுகாப்பு உண்டுதான், ஆனால் வெறிபிடித்த கூட்டம் பாயும்பொழுது எவ்வளவு நேரம் தாக்குபிடிக்க  முடியும்? கூடுதல் படைகள் வருமுன் விபரீதங்கள் அரங்கேறியிருக்கலாம்

உண்மையில் மோடியினை தொழில்நுட்பமே காப்பாற்றியது என்கின்றன சில தரவுகள், சில வான்வழி கண்காணிப்பும் இதர கண்காணிப்புகளுமே நிலமையின் வீரியத்தை சொல்லி எச்சரித்து அவரை திரும்ப வைத்திருக்கின்றன‌

சம்பவம் நடந்திருப்பது பாகிஸ்தானில் இருந்து வெறும் 25 கிமி தொலைவில் என்பதுதான் வருத்தத்துகுரிய விஷயம்

இந்திய திருநாட்டின் பிரதமர் அந்த நாட்டின் ஒரு மாகாணத்தில் மறிக்கபடுவதெல்லாம் ஏற்றுகொள்ள முடியா விஷயம்

பஞ்சாபிய அரசு இதற்கு முழு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும், பஞ்சாபிய முதல்வரும் பாதுகாப்பு அதிகாரிகளும் முழு விளக்கம் அளிக்கத்தான் வேண்டும் இல்லாவிட்டால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு கையில் எடுக்கலாம்

மோடிக்கு ஏன் அதிபாதுகாப்பு கார் என்பதன் அவசியம் இப்பொழுது உணரபடலாம்

இது ஒன்றும் ஆச்சரியமல்ல, இந்தியாவில் எப்பொழுதெல்லாம் வலுவான தலமைகள் வருமோ அப்பொழுதெல்லாம் அவர்கள் உயிருக்கு ஆபத்து வருவது ஒன்றும் ரகசியமல்ல இந்திய வரலாறு எங்கும் காணகிடக்கின்றது

சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் என அதுதான் நடந்தது. இந்திரா தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தப்பித்தான் கடைசியில் சீக்கியரிடம் பலியானார்

மோடியினை தொழில்நுட்பம் காத்திருக்கின்றது அல்லது தொழில்நுட்பம் மூலம் எல்லாம் வல்ல சக்தி காத்திருக்கின்றது, அவருக்கான கடமைகள் பலவற்றை செய்ய மிகபெரிய சக்தி வாய்பளித்திருக்கின்றது

அந்த கூடுதல் கடமை விவசாய சட்டங்களை வாபஸ் வாங்கியபின்னும் இந்த போராட்டத்தை தூண்டிய கும்பல் யாரென கண்டு வேரறுப்பது

பஞ்சாபில் ஆள்வது காங்கிரஸ் அரசு என்பதுதான் விசித்திரமான காட்சி

அந்த காங்கிரஸ்தான் இந்திரா காந்தியினையும் ராஜிவினையும் தேச எதிரிகளிடம் இழந்தது, அதே காங்கிரஸ் இன்னொரு பிரதமரின் பாதுகாப்பில் இவ்வளவு அசட்டையாக இருந்திருகின்றது என்பது பல கேள்விகளை எழுப்பும் விஷயம்

மோடி நலமாக திரும்பியிருக்கின்றார் அதற்கு காசி விஸ்வநாதர்முதல் எல்லா தெய்வங்களுக்கும் நன்றி

தேசத்தில் பிரதமருக்கு எதிரான பல சூழ்ச்சிகள் பின்னபடுகின்றன, அவற்றை முழுக்க கண்டறிந்து வேரறுத்து போடுவது பாதுகாப்பு அமைப்புகளின் கடமை

அதனை தேசிய பாதுகாப்பு அமைப்புகள் செய்யும் என எதிர்பார்ப்போம்

பஞ்சாப் காங்கிரஸ் அரசு உரிய விளக்கம் அளிக்கட்டும், விரைவில் தகுந்த பாதுகாப்போடு விழா நடத்தபடட்டும் அதை செய்யாவிட்டால் அந்த அரசு நீடிக்க தகுதி இல்லாதது என பொருள்

மிககடுமையான பாதுகாப்பு மோடிக்கு தேவை என்பதை இன்றைய சம்பவம் காட்டியிருகின்றது, அது உடனே நடைமுறைபடுத்தபட வேண்டு

செய்தி ஆசிரியர் ராஜேஷ் கண்ணா