ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை!!!
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், இலவச மின்மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தையல் கலை பயின்றவர் ஆக இருக்கவேண்டும் மற்றும் தையல்கலை பயன் அதற்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் ஆண்டு வருமான உச்சவரம்பு ஒரு லட்சமாக இருக்க வேண்டும் வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்கவேண்டும் கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட ஒரு போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் ஒருமுறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியான பயனாளிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு