கீழக்கரையில் முதற்கட்ட தேர்தல் பயிற்சி அரங்கம்!!

 ராமநாதபுரம் ஜன- 31

கீழக்கரையில் முதற்கட்ட தேர்தல் பயிற்சி அரங்கம்!

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி முதற்கட்ட தேர்தல் பயிற்சி அரங்கம் நடந்தது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சிகணேசன் இன்று காலை ஆய்வு செய்தார். இதில் கீழக்கரை நகராட்சி கமிஷனர் (பொ) மீரா அலி முன்னிலை வகித்தார். கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனி குமார், மற்றும்  முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசிநாத துரை, வருவாய்த்துறையினர் கலந்து கொண்டு, சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாட்டினை நகராட்சி கமிஷனர் (பொ)மீரா அலி செய்திருந்தார். இந்தக் முதற்கட்ட பயிற்சி அரகங்கத்தில் தேர்தலுக்கு செய்யக்கூடிய அனைத்து ஆசிரியர்கள் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு