சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அரசு பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டம்.

 சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அரசு பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டம்.சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அரசு பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில்  இம்மடிநாயக்கணப்பள்ளி அருகே அமைந்துள்ள அரசு பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அப்பள்ளி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அதிவேகமாக வரும் வாகனங்களால் பல பேர் விபத்துக்குள்ளாகி இறப்புகள் மற்றும் உடல் உறுப்புகள் இழப்புகள் ஏற்ப்பட்டு வருவதாகவும், மேலும் தாங்கள் பாதுகாப்புடன் சாலையை கடக்க சாம்பல்ப்பள்ளம் என்னுமிடத்தில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பள்ளி , கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் தர்ணா போராட்டத்தில்  வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி, சூளகிரி வட்டாட்சியர், ஓசூர் கோட்டாட்சியர், சூளகிரி காவல்துறையினர் இணைந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் தங்கள் பகுதிகளில் ஏராளாமான பள்ளி மாணவர்களையும் , பொதுமக்களையும் சாலை விபத்தில் இழப்பதாக கண்ணீர் விட்டு அழுதனர்.

மேலும் தங்கள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்தால் விபத்துகள் குறைந்து பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் நலமுடன் வீடு திரும்புவார் என்று பொற்றோர்கள் கூறினர்.

பள்ளி மாணவர்களின் நியமான கோரிக்கையை ஏற்ற அரசு அதிகாரிகளும் சட்டமன்ற உறுப்பினரும் ஒரே மாதத்தில் தங்கள் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என மாணவர்களிடமும் பொற்றோர்களிடமும் தெரிவித்தனர்.

நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின் மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதியளித்த பின்னர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற தர்ணா போராட்டம் அப்பகுதியில் சற்று பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்