கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் 33வது ஆண்டு பட்டமளிப்பு விழா

கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் 33வது ஆண்டு பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம் ஜன- 31

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் 33வது ஆண்டு பட்டமளிப்பு விழா அதன் அறக்கட்டளை தலைவர் S.M.A. முஹம்மது யூசுப் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் 468 மாணவ மாணவிகளுக்கு பொறியாளர் பட்டங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் முனைவர் டி.அணில் ஷாஷ்ரபுத்தே கலந்துகொண்டு வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் அழகிய மீனாள் வரவேற்புரை ஆற்றினார். அறக்கட்டளை செயல் இயக்குனர் P.R.V ஹமீது இபுறாகிம், இயக்குனர்கள் S.M.A.ஹபீப் முஹம்மது, S.M.A.Y. முஹம்மது சதக் தம்பி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் டூவீலர் இபுறாகிமின் மகள் ஆசியா பானு M.C.A பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு