கைநாட்டு துறையாகும் பள்ளிக்கல்வித்துறை

 கைநாட்டு துறையாகும் பள்ளிக்கல்வித்துறை

 நீண்ட நாள் Corona  விடுமுறைக்கு பின்பு கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் துவக்கப்பட்டது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பாகவே பள்ளிகள் திறந்தும் தமிழக அரசு பள்ளிகளை மிக காலதாமதமாகவே திறந்தது.

நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறந்த நாளிலிருந்து தீபாவளி விடுமுறை மழை விடுமுறை என்று பாதி மாதம் விடுமுறையில்  சென்று விட்டது. 

பள்ளிகள் செயல்பட்ட சில நாட்கள் கூட ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று சுழற்சி வகுப்புகள் தான் செயல்பட்டன.

தமிழகத்தில் பெயருக்குத்தான் பள்ளிகளை திறந்தார் களே தவிர ஒருநாள் கூட ஒழுங்காக ஒரு மாணவனுக்கு கூட ஒரு பாடம் கூட கற்றுத் தரவில்லை.

ஆனாலும் அரையாண்டு விடுமுறை வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.

இதை பெற்றோர்களும் உண்மையான கல்வியாளர்களும் எதிர்த்து வந்தனர் நடக்காத ஒரு தேர்வுக்கு எதற்கு விடுமுறை ஏற்கனவே மாணவர்களிடம் கற்றல் குறைபாடு நிறையவே இருக்கிறது எனவே விடுமுறை வேண்டாம் என்று கூறி வந்தனர்.

இதனால் இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இதை பார்த்து கொதித்துப் போன அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் எப்படியும் அரையாண்டு விடுமுறையை பெற்றுத் தந்து விடுவோம் என்று கொக்கரித்துக் கொண்டிருந்தன.

அவர்களின் சங்க வாட்ஸ் அப் குழுக்களில் நொடிக்கு நொடி இதுதொடர்பான அப்டேட்களை அள்ளி தெளித்து கொண்டிருந்தனர். பள்ளிக் கல்வி அமைச்சரும் ஆணையாளரும் நெல்லையில் இருக்கிறார்கள் விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களின் அடிவருடிகள் இதை அப்படியே மாணவர்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தார்கள் இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை கண்டிப்பாக உண்டு என்று.

இதனால் பள்ளிக் கல்வித் துறையில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சர் யார்..? ஆணையாளர் யார்..?  யார் ஆணையிடுகிறார்கள் என்றே தெரியவில்லை..!

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை 23 12 2021 அன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை உண்டு என்று அறிவித்தார் .இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் உடனுக்குடன் அதை அப்படியே தங்கள் செல்போனில் படம்பிடித்து உலகம் முழுதும் பரப்பினார்கள்.

ஆனால் இதற்கான அரசின் முறையான ஆணை எதுவும் வராததால் இதனால் விடுமுறை உண்டா இல்லையா என்கிற குழப்பம் நேற்று பிற்பகல் வரை நீடித்தது.

இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறை ஆணையரகம் பிறப்பித்த ஒரு இரண்டு வரி ஆணை தமிழக மக்களையே முட்டாளாக்கி உள்ளது.

25 12 21 முதல் விடுமுறை என்று அறிவித்தால் இத்தனை நாட்கள் விடுமுறையா என்கிற கேள்வி வரும் என்பதால் 27 12 2021 முதல் 31 12 2022 வரை என்று ஒரு வருட விடுமுறை அறிவித்தது.

பள்ளிக்கல்வித்துறை நேற்று மாலை 4.00 மணிக்கு அவசர அவசரமாக அறிவித்த இந்த தவறான அரசாணையில் மேலும் ஒரு தவறு.

பள்ளிகள் மீண்டும் 31. 01. 2022 முதல் வழக்கம் போல் செயல்படும் என்பதற்கு பதிலாக 03. 01.2021 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டு  இருந்தது.

இந்த அரசாணை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உடனடியாக சென்றதோ இல்லையோ ஜாக்டோ ஜியோ வின் கைகளுக்கு சென்றுள்ளது.  பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகத்தில் கால்  கடுக்க காத்திருந்து வாங்கியிருப்பார் போல்.. அதை சரியாக படிக்க கூட இல்லாமல் அனைவருக்கும் உடனடியாக பார்வேர்ட் செய்து விட்டார்கள்.

இவர்களின் இந்த அத்துமீறிய செயலால் தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்றைக்கு கூனிக்குறுகி நிற்கிறது அனைவராலும் படு கேவலமாக பார்க்கப்படுகிறது.

விடுமுறை விடுவதில் உள்ள ஆர்வக்கோளாறில் அவசர அவசரமாக டைப் அடித்ததில் ஏற்பட்ட தவறு. பின்னர் நாலு முப்பது மணி அளவில் சரி செய்யப்பட்டு வேறு ஒரு ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.

பள்ளிக்கல்வி ஆணைரக்த்தில் இப்போதெல்லாம் யார் ஆணை இடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆளாளுக்கு தனித்தனி உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கல்வி ஆணையாளர் தொடங்கி அடிமட்ட ஆசிரியர்கள் வரை அனைவரும் அப்படியே இருக்கிறார்கள். இப்படியே இருந்தால் தமிழக பள்ளிக்கல்வித்துறை எப்படி உருப்படும்....?

Corona காலத்தில் தமிழக மாணவர்கள் தான் படிக்க தெரியாத முட்டாள்கள் ஆக மாறி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தமிழக மாணவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக பள்ளிக் கல்வித்துறையும் கைநாட்டு துறையாக மாறிவிட்டது  என்று சொல்கிற அளவிற்கு நிலைமை முற்றிப்போய் உள்ளது.

வருடத்திற்கு 33 ஆயிரம் கோடி ரூபாய்களை வீணாக செலவழித்துக் கொண்டிருக்கும் பள்ளிக் கல்வித் துறையால் ஒரு ஆணையை கூட ஒழுங்காக அச்சிட்டு வெளியிட தெரியவில்லை என்பது பள்ளிக்கல்வித்துறைக்கு மிகப்பெரிய அவமானம்.