நீதியின் தேசத்தை மீட்க, என்ற தலைப்பில் தமுமுக வின் சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

நீதியின் தேசத்தை மீட்க, என்ற தலைப்பில் தமுமுக வின் சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் டிச- 06

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நீதியின் தேசத்தை மீட்க, என்ற தலைப்பில் தமுமுக வின் சார்பில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமை நிலைநாட்டப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு      தமுமுக, மமக,மத்திய மாவட்ட தலைவர் ஷரீஃப் அவர்கள் தலைமையில், நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநிலச் செயலாளர் மௌலவி.அப்துல் காதர் தமுமுக மாநிலச் செயலாளர்கள் சலீமுல்லாகான் அவர்கள், சாதிக் பாட்சா அவர்கள் மமக மாநில அமைப்புச்செயலாளர் உசேன்கனி அவர்கள், தமுமுக மாவட்டச் செயலாளர் (கிழக்கு) பட்டாணி மீரான், மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் வேலுசாமி, உலகத்தமிழர் பேரவை நிறுவனர் வழக்கறிஞர் எழிலரசன், ராமநாதபுரம்

வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு  கோஷங்களை எழுப்பினர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு