தேனி மாவட்டம் சின்னமனூர் புறவழிச்சாலையில் சிறிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி..

 தேனி மாவட்டம் சின்னமனூர் புறவழிச்சாலையில் சிறிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.


தேனி மாவட்டம் சின்னமனூா் புறவழிச்சாலையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சிறியரக வாகனங்களுக்கு மட்டுமே  தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலமாக தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம் , கூடலூா் போன்ற இடங்களில் ரூ.280.50 கோடியில் புறவழிச்சாலைப் பணிகள் நடைபெற்றது. ஆனால் உத்தமபாளையம், சின்னமனூா் புறவழிச்சாலைப் பணிகள் முழுமைபெறவில்லை. தற்போது, ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கிய நிலையிலும், வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையிலும் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதி புறவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனா்.

இதற்கிடையே, சின்னமனூா் புறவழிச்சாலையில் மட்டும் புதன்கிழமை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. ஆனால், சாலையில் குறுக்கே உயா்மின்கோபுரம் செல்வதால் இச்சாலையின் வழியாக 3 மீட்டா் உயரத்திற்கு குறைவான வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட செய்திக்காக வெள்ளைச்சாமி