சென்ட்ரல் ராமநாதபுரம் ஹோமர் கிளப் 3, 4-ம் ஆண்டு பரிசளிப்பு விழா
ராமநாதபுரம் டிச-05
சென்ட்ரல் ராமநாதபுரம் ஹோமர் கிளப் ராமநாதபுரம் (CRHC)
2020-21 ஆம் ஆண்டு நடந்த பந்தயத்தில் வெற்றிபெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இன்று தனியார் திருமண மஹாலில் சென்னை AMHC தலைவர் திரு.A.R. தன் சிங் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வழக்கறிஞர் திரு.ரவிச்சந்திர ராமவன்னி, வழக்கறிஞர் முனியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார். 2020,2021ஆம் ஆண்டிற்கான சாம்பியன்களாக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் எம்.பாலமுருகன், ஹாஜி, ரவி உள்ளிட்ட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் போட்டிகளில் ஆயிரம், கிலோமீட்டர் 1500 கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் நடைபெற்றது.இதில் ஆயிரம் கிலோமீட்டர் ஹோமர் புறா ஏர்வாடியில் இருந்து கரீம்நகர் வரைபறந்து சென்றது. இந்த புறாவின் உரிமையாளர், ஏர்வாடி ஹாஜி செய்யதுஹமீது லெப்பை உரிமையாளர் ஆவார்.இதில் அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் அறிவிப்பாளர் அண்ணாதுரை அவர்கள் தொகுத்து வழங்கினார். இதில் ஏராளமான சென்னை திருச்சி, மதுரை, இளையான்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஹோமர் புறா பந்தய சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை நிறுவனத் தலைவர் திரு. ஆனந்த மோகன், செயலாளர் B.ஜெகதீசன், பொருளாளர்.திரு.எம் பாலமுருகன் மற்றும் ஹோமர் சங்க உறுப்பினர் திரு.சந்திரன், ஆகியோர் விமரிசையாக செய்திருந்தனர். பி.ஜெகதீசன், நன்றி உரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு