ஆர். டி. இ. கல்வி கட்டண பாக்கி 25 சதவீத தொகையை உடனே விடுவிக்க வேண்டும் : பள்ளிக்கல்வி ஆணையாளருக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்.....
எங்கள் கோரிக்கையை ஏற்று தனியார் பள்ளிகளுக்கு தரவேண்டிய கல்வி கட்டண பாக்கிய வழங்கியமைக்காக நன்றி பாராட்டி பள்ளிக்கல்வி ஆணையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பாக்கியுள்ள 25 சதவீத கட்டணத்தை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மரியாதைக்குரிய பள்ளிக்கல்வி ஆணையாளர் ஐயா அவர்களுக்கு..
வணக்கம்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்ற ஆண்டுக்கான
ஆர். டி. இ கல்வி கட்டண பாக்கியை வழங்கிய தமிழக அரசுக்கும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பள்ளி கல்வித்துறை ஆணையாளர் மெட்ரிக் பள்ளி இயக்குனர் தொடக்கக்கல்வி இயக்குனர் எஸ் எஸ் வி எஸ் பி டி உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.....
எங்கள் கோரிக்கையை ஏற்று தனியார் பள்ளிகளுக்கு தரவேண்டிய கல்வி கட்டண பாக்கிய வழங்கியமைக்காக நன்றி பாராட்டி எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் எஸ்எஸ்ஏ எஸ்பிபி அலுவலகம் முன்பு டிசம்பர் 6 ஆறாம் தேதி நடத்தவிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ரத்து செய்கின்றோம்... என்பதை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மத்திய அரசு வழங்கிய 100% கல்வி கட்டண பாக்கியை பல மாநில அரசுகள் ஏற்கனவே முன்கூட்டியே 100% தனியார் பள்ளிகளுக்கு தந்து விட்டார்கள்.
ஆனால் தமிழகஅரசு 100% தருவதாக போட்ட ஆணையை திடீரென்று 75 சதவீத கல்வி கட்டணம் என்று அறிவித்து ஆணை போட்டு தனியார் பள்ளி நிர்வாகிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடியது தான் அனைவருக்கு
மிகப் பெரிய மன வருத்தத்தை தந்துள்ளது.
உயர்நீதிமன்றம் 75 சதவீதம் கல்வி கட்டணம் வசூலிக்க ஆணையிட்டது பெற்றோர்களின் பொருளாதார நிலை அறிந்து பெற்றோர்களுக்கு உதவுவதற்காக....
ஆனால் தமிழக அரசு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 100% சம்பளம் வழங்கி விட்டு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் 75 சதவீத கல்வி கட்டணம் நிர்ணயித்து இருப்பது ஒரு கண்ணுக்கு வெண்ணெயும்
ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைப்பது போல் உள்ளது...
எனவே அருள்கூர்ந்து மீதமுள்ள 25 சாக கல்வி கட்டணத்தை வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் மீண்டும் மீண்டும் வேண்டுகின்றோம்.
இன்னும் நிலையிலுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கியை உடனே அனுப்பிவைக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்.
தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கையை இதுவரை எதுவும் ஏற்காமல் ஒருமுறைகூட அழைத்து பேசாமல் இருப்பது எங்களை வஞ்சிப்பது போல் உள்ளது.
குறைந்தபட்சம் தனியார் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பேசுங்கள்.
அரசுக்கு பெரும் பணச் சுமையை பணிச்சுமையை குறைத்து தரமான கல்வியைத் தரும் எங்களை தள்ளி வைத்து விடாதீர்கள்.
நாங்கள் எந்த வகையிலும் அரசு பள்ளிக்கு குறைவானவர்கள் அல்ல என்பதை தயவு செய்து உணர்ந்து எங்களுக்கு உதவுங்கள் என்று உங்களை அன்போடு வேண்டுகின்றோம்.
நன்றியுடன்
கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.