சிலம்பாட்ட கழகம் சார்பில் 22 ஆம் ஆண்டு சிலம்பாட்ட போட்டிகள்:-

சிலம்பாட்ட கழகம் சார்பில் 22 ஆம் ஆண்டு சிலம்பாட்ட போட்டிகள்:-

ராமநாதபுரம் டிச- 12

ராமநாதபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 22 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி இன்று  ராமநாதபுரம் ராஜா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்தப் போட்டிக்கு பாளையம்பட்டி இளைய ஜமீன்தார் ஆர்.பத்மராஜா என்ற அஸ்வின் ராஜா, தலைமையில் மிக விமரிசையாக நடைபெற்றது.இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு அலுவலர் திரு .செந்தில்குமார்,மாவட்ட செயலாளர்

எஸ்.தில்லைக்குமரன், மாவட்ட பொருளாளர் ஆர். முத்துராமன் உள்ளிட்ட, மாவட்ட நிர்வாகிகளும், நிர்வாகக் குழு உறுப்பினர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும், திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிலம்பாட்டபயிற்சி பொறுப்பாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனையடுத்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.இதில் நெருப்பு வளையத்தில் நின்று சிலம்பம் சுற்றுதல், பாட்டிலில் நின்று சிலம்பம் சுற்றுதல், ஒற்றைக்காலில் நின்று சிலம்பம் சுற்றுதல்,கண்ணைக் கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றுதல், ஐஸ் கட்டியின் மீது நின்று சிலம்பம் சுற்றுதல்,இவைகள் அனைத்தும் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றது. இதில் 9 மாணவர்கள் கலந்துகொண்டு உலக சாதனையை நிகழ்த்தினார்கள் சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பாது