டுபாக்கூர் பைஜூஸ் ஏமாறும் பெற்றோர்கள்...!?

டுபாக்கூர் பைஜூஸ் ஏமாறும் பெற்றோர்கள்...!?


Corona  தொற்று காரணமாக கடந்த 20 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் தேவையே மிக பெரிய அளவில் வியாபாரம் ஆகியுள்ளது பைஜூஸ் ஆப் நிறுவனம்.

பெரிய ஊடகங்கள் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை அனைத்திலும் இதன் விளம்பரங்கள்தான் ஆக்கிரமித்து இருந்தது இதை பெரிதாக நம்பிய பெற்றோர்கள் பள்ளிகளில் வழங்கும் ஆன்லைன் வகுப்புகளையும் தாண்டி தனிப்பட்ட முறையில் தங்கள் பிள்ளைகளை பை ஜூஸ் ஆன்லைன் வகுப்பில் சேர்த்து விட்டனர்.

இந்த ஆன்லைன் வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு Tab Free என்று கூறி தனியார் பள்ளிகளில் முழு நேர வகுப்புக்கு வசூலிக்கும் கட்டணத்தை காட்டிலும் அதிகமான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டுகவர்ச்சிகரமான சில விளம்பரங்களை காட்டி ஒவ்வொரு பெற்றோரின் வீடுகளுக்கும் சென்று வியாபாரம் செய்தார்கள்

இது எவ்வளவு பெரிய டுபாக்கூர் பார்ட்டி என்பது தற்போது தான் தெரிய வந்துள்ளது.

BYJU'S  App ன் கோவை மாவட்ட மூத்த கல்வி ஆலோசகர் தற்போது என்னிடம் பேசினார்.

பைஜுஸ் ஆப் கல்வி வழங்கும் முறை வகுப்பறை கல்வியை விட மிகச் சிறப்பானது என்றார். வகுப்பறை யில் ஒரு மணி நேரம் எடுக்கும் பாடத்தை நாங்கள் 10 நிமிடங்களில் எடுத்து விடுவோம் என்றார். இந்திய விடுதலை போராட்ட வரலாற்றை 10 நிமிடங்களில் எடுங்கள் என்றேன் . "அது வந்து சார் , எங்கள் ஆசிரியர்கள் எடுப்பார்கள்"  என்றார் . அவர்கள் எப்படி எடுப்பார்கள் என்று கேட்டால், எங்களிடம் இந்தியாவின் டாப் 7 ஆசிரியர்கள் உள்ளார்கள், அவர்கள் எடுப்பார்கள் என்றார். டாப் 7 ஆ...யார் அதை தீர்மானித்தது என்றால் ?? நாங்கள் தான் என்றார். கேந்திரிய வித்யாலயா பள்ளி ஸ்டேட் போர்டா ? CBSE ஆ என்று கேட்டார். 

யுனெஸ்கோ நிறுவனம் வகுப்பறை கற்றல் பற்றி சொல்லியுள்ளது குறித்து தெரியுமா என்று கேட்டதற்கு தெரியாது , யுனெஸ்கோ ன்னா என்ன என்று கேட்டார் .  

பைஜூ ஆப் பின் விற்பனை பிரதிநிதிகள் கல்வி ஆலோசகர் கள் என்று சொல்லிக் கொண்டு வகுப்பறை கற்றலை கொச்சைப் படுத்தும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். தங்கள்  நிறுவனத்தின்  கல்வி வியாபார நடவடிக்கைகளுக்காக அவர்கள் செய்யும்  இந்த கீழ்த்தரமான செயல்களை ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும். இந்தியாவில் மிகக் குறைந்த காலத்தில் , பைஜுஸ் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் களை விற்று முதலாக கொண்டு வளர்ந்து வருகிறது. நமது நாட்டில் கல்வி மீதுள்ள ஆர்வத்தை பயன்படுத்தி காசு பண்ணும் தொழிலில் தொழில்நுட்ப வசதிகளோடு களமிறங்கி உள்ளது . 

இந்தியக் கல்வி அமைப்பில் வளர்ந்து வரும் ஏற்றத் தாழ்வுகளை ஆன்லைன் கல்வி வியாபாரம் மேலும் ஆழமானதாக்கும் அபாயம் உள்ளது. 

எதிர்த்து நிற்போம் ! 

உங்களுக்கு போன் வந்தாலும் விழிப்போடு எதிர்க் கேள்விகள் எழுப்புங்கள். விற்பனை பிரதிநிதிகள் ஒரு போதும் கல்வி ஆலோசகர் ஆக முடியாது.  வகுப்பறை கற்றலுக்கு எதிராக பேசிவரும் பைஜுஸ் ஆப் நிறுவனத்தை ஆசிரியர் அமைப்புக்கள் கண்டிக்க வேண்டும். 

கல்வி விற்பனைக்கல்ல....!

வியாபார நோக்கோடு மட்டுமே செயல்பட்டு வருகின்ற இந்த நிறுவனங்களில் பணியாற்றும் மார்க்கெட்டிங் ஏஜெண்டுகளுக்கு பெற்றோர்கள் பொதுமக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லத் தெரிவதில்லை. இந்த ஆப் மூலம் மாணவர்களும் உருப்படியாக எதுவும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இதில் மாட்டிக் கொண்டவர்கள் விழிபிதுங்கி முழிக்கிறார்களே தவிர முழுமையான கல்வியை கற்க வில்லை. 

இதனால் பல பெற்றோர்களின் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் வீணானது தான் மிச்சம். எனவே அரசாங்கம் இந்த ஏமாற்று வேலைக்கு இனியும் துணை நிற்காமல் உடனடியாக இந்த ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டும்.

தற்போது பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறந்து உள்ள நிலையில் நேரடி வகுப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.