நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அதிவிரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பேரூராட்சி,நகராட்சி இவைகளுக்கு மாவட்ட செயலாளர் திரு.முனியசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் திரு.மணிகண்டன் முன்னிலையிலும் விருப்பமனுக்கள் வழங்கபட்டன.
ஏராளமான அதிமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு விருப்பமனுக்களை அளித்தனர். ராமநாதபுரம் நகராட்சி 25-வது வார்டு (பெண்) தாயம்மாள் க/பெ குமார் Ex. MC இதனையடுத்து M.முருக ஜோதி, க/பெ மாரிக்கண்ணன் 29-வது வார்டு (பெண்), ரமேஷ் S/o மாரிமுத்து 28-வது வார்டிற்க்கும் ராமநாதபுரம் நகராட்சிக்கு வார்டிற்க்கும் போட்டியிட விருப்பமனுவை தாக்கல் செய்தார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு