புதிய வாக்காளர்கள் ஆர்வம்:

 புதிய வாக்காளர்கள் ஆர்வம்:

*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழகத்தில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.*

*அந்த வகையில் உளுந்தூர்பேட்டையில் பல்வேறு வாக்குச்சாவடிகளில், இந்த சிறப்பு முகாம்கள் நடந்துவருகிறது.*

*இந்த முகாம் பணிகளை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.*

*புதிய வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்த்து வருகின்றனர்.*

*வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை (பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம்) மேற்கொள்ள விரும்புகிறவர்கள், வாக்குச்சாவடிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களை அங்குள்ள அலுவலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

* நிருபர் ஜி. முருகன்