நீதிமன்ற ஆணையை மதிக்காத பள்ளிக்கல்வித்துறை; நிரந்தர அங்கீகாரம் கோரி மேல்முறையீடு செய்வோம்....
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அரசாணை எண் 752 நாள் 02.09.1994 இன் படி அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான அனைத்து வகை நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் எனும் அரசாணையை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றமும் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரி தீர்ப்பு வழங்கிய பின்.....
அரசாணை எண்..752.. நாள்..02.09.1994. மேற்கண்ட அரசாணையை தற்போது ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறார்கள். பழையபடியே மூன்றாண்டுகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க பரிந்துரை செய்கிறார்கள்...
சாமி வரம் கொடுத்தும் பூஜாரிகள் செய்ய மறுக்கிறார்கள் என்ன காரணம்...
இந்த ஆட்சியில் நமக்கு நல்லதே நடக்காது என்கிற எண்ணம் தோன்றுகிறது..
அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுக்களான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் தந்தால்...அரசு அதிகாரிகளுக்கு பணிச்சுமையும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கும் பணச்சுமையும் குறையும்....
அரசுப் பள்ளிகளுக்கும் ஆண்டுதோறும் அதிகாரம் கொடுத்தால்தான் தெரியும் எவ்வளவு சிரமம் உள்ளது என்று....
ஆன்லைன் வழியே அங்கீகாரம் தருவதாகச் சொல்லி அரசாணை போட்டுவிட்டு சாப்ட்வேர் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்களே... இதைவிட கேவலம் என்ன.,...
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் இருக்கும்வரை எல்லாம் நடக்கும் இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்...
நீதிமன்ற ஆணைக்கு செவிசாய்க்காத பள்ளிக்கல்வித்துறையை மீண்டும் நீதிமன்றத்தில் சந்திக்க மேல்முறையீடு செய்வது என்று நமது மாநில சங்கம் முடிவு எடுத்திருக்கிறது...
பள்ளி நிர்வாகிகள் தங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள்..
அன்புடன் உங்கள் கே. ஆர்.நந்தகுமார்.
மாநில பொதுச் செயலாளர்.