இது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி; திருமாவளவன் பேட்டி....

இது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி;  திருமாவளவன்  பேட்டி....

எதிர் வரவுள்ள உத்தரப்பிரதேச பொதுத்தேர்தலை உத்தரகாண்ட் அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசின் ஆதயத்திற்கு இந்த முடிவை எடுத்தாலும் கூட இது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று ராமநாதபுரம் வருகை தந்த தமிழ்நாடு விடுதலை சிறுத்தை கட்சியின் உடைய தலைவர் முனைவர் திருமாவளவன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் பொழுது தெரிவித்தார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள ஓரி கோட்டை கிராமத்தில் பிறகு போதி புத்தர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாளை சமூகநீதிக் சமூகங்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் கருத்தரங்கம் நடத்தி வருகிறது. இதனை ஒட்டி நடைபெற்ற  தனியார் மண்டப நிகழ்ச்சியில் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ரமேஷ் பிரபாகர் சதானந்தம் யோசேப் முன்னிலை வகித்தனர்.

 இதில் தமுமுக மாநில செயலாளர் சனாகான் காங்கிரஸ் கட்சி பிரபா அரங்கநாதன் அதிமுக பசும்பொன் பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்.எஸ். பெருமாள் சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மவுரியா புத்தா சமூக ஆர்வலர் பாஸ்டர் கிருபா விஜயகுமார் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். முகவை மீரான் நன்றி உரை நிகழ்த்தினார்.  இதனையடுத்து விடுதலை சேகர் தலைமையில் வாழ்த்துரை நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில் பழனி குமார், விடுதலை கிட்டு பள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கானா முகமது யாசின் வரவேற்றார். இந்த மாபெரும் நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி, ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் மிக அருமையான முறையில் வாழ்த்துரை வழங்கினார்கள். விசிக தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் எம்பி அவர்கள் ஏற்புரை வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை விழாக்குழுவினர் செய்திருந்தனர். இதில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு